ETV Bharat / state

பொதுமக்களைக் கும்பிட்டு முகக்கவசங்கள் வழங்கிய எம்எல்ஏ!

தஞ்சாவூர்: மதுக்கூர் பகுதியில் தடை உத்தரவைப் பொருட்படுத்தாமல் பொதுவெளியில் சுற்றித்திரிந்த மக்களிடத்தில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கையெடுத்து கும்பிட்டு எம்எல்ஏ சேகர் முகக்கவசங்கள் வழங்கினார்.

MLA Creates Awareness to People about Corona

author img

By

Published : Mar 28, 2020, 12:06 AM IST

கரோனோ வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசு ஊரடங்கு அறிவித்து, அதன்படி பட்டுக்கோட்டை நகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் கடைகளும் அடைக்கப்பட்டு முறையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களைக் கும்பிட்டு முகக்கவசங்கள் வழங்கிய எம்எல்ஏ

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் பேரூராட்சி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் தெருக்களில் சுற்றித் திரிவதுமாக புகார்கள் வந்தன.

இதையடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்களுடன் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி .சேகர், மதுக்கூர் சேர்மேன் அமுதா துரைசெந்தில் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அவசர ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களுக்கு வைரஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுவெளியில் சுற்றக்கூடாது என்றும், வைரஸ் பாதிப்பு குறித்த அறிவுரைகளைக் கூறி வீட்டிலேயே இருக்க வேண்டும் என அரசு அலுவலர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என அனைவராலும் கைகூப்பி கேட்டுக்கொண்டதோடு, அனைவருக்கும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.