தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் இடையே, காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இந்நிலையில் இந்த பாலத்திற்கு சுமார் எட்டு கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியானது, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், கோட்டப் பொறியாளர் கலைவாணி, கோட்ட உதவிப் பொறியாளர் பாலாஜி உள்பட ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.