ETV Bharat / state

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்! - குடியுரிமை சட்டம்

தஞ்சை: குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பட்டுக்கோட்டை, கரூர், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Dec 18, 2019, 4:32 AM IST

குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கண்டித்து மாவட்ட தலைவர் ராஜிக்முகம்மது தலைமையிலும், மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்ஷா முன்னிலையிலும் பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் முஹம்மது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ‘இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்கிவிட்டு முஸ்லிம்களை மட்டும் புறக்கணிப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பானது. இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கண்டிக்கிறது’ என்றார். இதில் 100 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

இதேபோன்று குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கண்டித்து கரூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கரூரில் உள்ள ஜவகர் பஜார் கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மதர்ஷா பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தவிர கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Intro:குடியுரிமை சட்டம் ரத்து -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்-மாநில பொதுச்செயலாளர் முஹம்மது பங்கேற்பு

Body:தேசிய குடியுரிமை சட்ட மசோதாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட தலைவர் ராஜிக்முகம்மது தலைமையிலும் மாவட்ட செயலாளர் வல்லம் பாட்ஷா முன்னிலையிலும் பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் முஹம்மது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில் இந்து,கிருஸ்தவர்கள்,சீக்கியர்கள், பார்சிகள்,ஜெயின் மற்றும் பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்கிவிட்டு முஸ்லிம்களை மட்டும் புறக்கணிக்கப்படுவது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பானது இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கண்டிக்கிறது இவ்வாறு பேசினார். இதில் 100பெண்கள் உட்பட500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசின் இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எலுப்பப்பட்டன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.