ETV Bharat / state

கல்லூரி மாணவரின் உயிரிழப்பிற்குக் காரணமான மருந்துக்கடைக்குச் சீல்..!

கும்பகோணத்தில் இருந்து கோவை தனியார் கல்லூரி மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் போதைப் பொருட்கள் சப்ளை செய்து வந்த முகமது பசீரின் மருந்துக்கடைக்கு கும்பகோணம் காவல் துறையினர் சீல் வைத்தனர்.

மெடிக்கல்லுக்கு சீல்
மெடிக்கல்லுக்கு சீல்
author img

By

Published : Aug 1, 2022, 7:51 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் மேலக்காவிரி வடக்கு குடியானத்தெருவைச்சேர்ந்தவர், முகமது பசீர்(48). இவர் ஹாஜியார் தெருவில் மருந்துக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், இவரது மருந்துக்கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக இரு ஆண்டுகளாவே, பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன. இதனைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் இவர் கோவை மாவட்டம், ஈச்சனேரி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரைகளை கடந்த ஒரு ஆண்டாக விற்பனை செய்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

கல்லூரி மாணவர் உயிரிழப்பு: இந்த போதை மாத்திரைகளை எடுத்துக்கொண்ட 2 மாணவர்களில் ஒருவர் கடந்த மாதம் 13ஆம் தேதி திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். தொடர்ந்து அங்கிருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியபோது, அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடற்கூராய்வில், நரம்பு வழியாக போதை மருந்து எடுத்துக்கொண்டதில் உயர் ரத்த அழுத்தத்தால் இதய செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

வாட்ஸ்அப்பில் போதை மருந்து வியாபாரம்: இதனையடுத்து, மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து கும்பகோணம் மருந்துக்கடை உரிமையாளர் முகமது பஷீர், வங்கிக்கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்ததும், வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாறிக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கூரியர் மூலம் போதை மாத்திரைகளை விநியோகம் செய்ததும் தெரியவந்தது. இதுபோல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து போதை மாத்திரைகளை இவர் பல ஆண்டு காலமாக விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது.

செரின் மெடிக்கல் உரிமையாளர் கைது
மருந்துக்கடை உரிமையாளர் கைது

இதனைத்தொடர்ந்து, மருந்தக உரிமையாளர் முகமது பஷீரை கடந்த மாதம் 18ஆம் தேதி கோவை தனிப்படை போலீசார் கோவைக்கு விசாரணைக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குற்றம் உறுதி செய்யப்பட்டதன்பேரில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மருந்துக்கடைக்குச் சீல்: இதனிடையே முகமது பசீர், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இருந்துள்ளார். பின்னர், அண்மையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த நிலையில் கைது ஆகியுள்ளார். இன்று (ஆக.1) மாலை தஞ்சாவூர் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் மலர்விழி தலைமையிலான அலுவலர்கள், கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மற்றும் மேற்கு காவல் ஆய்வாளர் பேபி முன்னிலையில், போதை மாத்திரைகளை விற்ற முகமது பஷிருக்குச்சொந்தமான கும்பகோண மருந்துகடைக்குச் சீல் வைத்தனர்.

செரின் மெடிக்கல்லுக்கு சீல்
மெடிக்கல்லுக்குச் சீல்

கடந்த 18ஆம் தேதி போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக முகமது பஷீர் கைது செய்யப்பட்ட நிலையில், ஏன் அவரது மருந்துக்கடைக்கு இன்னமும் சீல் வைக்கவில்லை; உடனடியாக சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினர் நாளை (ஆக.2) சம்பந்தப்பட்ட மருந்துக்கடை முன்பு, ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக கும்பகோணம் மாநகரில் இது குறித்த சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று மாலை முகமது பஷீரின் மருந்துக்கடைக்கு அதிரடியாக தஞ்சாவூர் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: Video:நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விடாது பெய்யும் அடைமழை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.