தஞ்சாவூர்: கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் பவானி அம்மன் கோயில் உள்ளது.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பாவ்ஸார் சத்திரிய (மராட்டிய) சமூகத்தினர் அம்மன் பண்டிகை என்கிற மங்காளியம்மன் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (டிச. 28) காலை மங்காளியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றியும், கொழுக்கட்டை நிவேதனம் செய்தும் பக்தர்கள் வழிப்பட்டனர்.
இதையும் படிங்க: திருவெம்பாவை உற்சவம்: தங்க தேர் புறப்பாடு ரத்து