தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி மஞ்சுளா (திமுக) விட்டலூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
மனோகரனின் உறவினர் திருச்சியைச் சேர்ந்த அஞ்சம்மாள் என்பவரிடம் இருந்து இரண்டரை ஏக்கர் நிலத்தில் மனோகரன் தற்போது நெல் நடவு செய்திருந்தார். அந்த நிலத்தை அஞ்சம்மாள், அதே ஊரைச் சேர்ந்த ரெமோ என்பவரிடம் விற்பனை செய்துவிட்டார்.
இந்நிலையில், நிலத்தை வாங்கிய ரெமோ இரு தினங்களுக்கு முன்பு நிலத்தில் அறுவடை செய்ய முயன்றபோது மனோகரன் தரப்பினருக்கும் ரெமோ தரப்பினருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.
இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், ரெமோ தரப்பினர் நாகை மாவட்டம், மூலங்குடியைச் சேர்ந்த காளிமுத்துவிடம் (53) அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துவந்து அறுவடை செய்ய முயன்றபோது சாகுபடி செய்திருந்த மனோகரன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுள்ளார்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மனோகரன் தரப்பினர் அறுவடை இயந்திரத்தின் உரிமையாளர் காளிமுத்துவை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த காளிமுத்துவை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே காளிமுத்துவின் உயர் பிரிந்துவிட்து.
இதையடுத்து, திருநீலக்குடி காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து, மனோகரன் உள்ளிட்ட ஐந்து பேரையும் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துச் சென்ற ரெமோ, அவரது சகோதரரான காவலராகப் பணிபுரியும் பார்த்திபன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த காளிமுத்துவின் சகோதரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : இந்திய ராணுவத்துக்கு தடைசெய்யப்பட்ட ஆயுதம் விநியோகம் ?