தஞ்சாவூர்: கும்பகோணம் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் சுவாமிநாதன் நேற்று ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்றும் நாளையும் என இரு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதுடன், இப்படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயிலை சேர்ந்த சுவாமிநாதன், கும்பகோணம் வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார், நேற்று அவரது சகோதரி திருமணம் அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்துள்ள அணைக்குடம் கிராமத்தில் நடைபெற்றது, இதில் அவர் பங்கேற்றிருந்த நிலையில், ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலால், அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொடூர செயலை கண்டித்து கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இன்றும் நாளையும் என இரு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதுடன், இப்படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஒருங்கிணைந்து நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தலைவர் மா ராஜசேகர் தலைமையில், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
அப்போது சமீப காலமாக தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது என்று குற்றச்சாட்டும் வழக்கறிஞர்கள் தரப்பில் வைக்கப்பட்டது இதற்கு தமிழக காவல்துறை விரைந்து நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை