ETV Bharat / state

கும்பகோணம் விஸ்வநாதர் கோயில் தனிநபர் பட்டா ரத்து செய்ய உத்தரவு - வழக்கறிஞர் ஆர்.பிரகாஷ் தகவல்! - Lawyer R Prakash

Kumbakonam news: கும்பகோணம் விஸ்வநாதர் கோயில் நிலத்திற்கு, தனி நபர் பெயர்களில் வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதாக வழக்கறிஞர் ஆர்.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

lawyer-r-prakash
வழக்கறிஞர் ஆர்.பிரகாஷ் பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 11:30 AM IST

வழக்கறிஞர் ஆர்.பிரகாஷ் பேட்டி

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் அமைந்துள்ள ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயில் நிலத்திற்கு, தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் செந்தில் முருகன் மற்றும் சிவசேனா மாநில துணைத் தலைவர் பூக்கடை ஆனந்த் ஆகிய இருவரும் இணைந்து, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனுவை தாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “மகாமகம் தொடர்புடைய 12 சைவத்திருக்கோயில்களில் ஒன்றான கும்பகோணம் ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான புல எண் 55-இல், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 3 ஏக்கர் நிலம், 1973 முதல் தற்போது வரை 80 நபர்களுக்கு முறைகேடாக தனி நபர் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, தனி நபர் பெயர்களில் வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தனர். இவ்வழக்கு நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.பிரகாஷ் ஆஜராகி வாதாடினார்.

இது குறித்து வழக்கறிஞர் ஆர்.பிரகாஷ் கூறுகையில், “கோயில் நிலம் குறித்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், புல எண் 55-இல், 200 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஏக்கர் பரப்பிலான இடம், முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கும்பகோணம் அறநிலையத்துறை உதவி ஆணையர், முறைப்படி கோட்டாட்சியரிடம் பட்டா மாற்றம் குறித்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதனையடுத்து, 12 வாரங்களுக்குள் விசாரணை மேற்கொண்டு, தவறுதலாக வழங்கப்பட்ட பட்டார்களை ரத்து செய்ய வேண்டும் என கடந்த நவம்பர் 11ஆம் தேதி கும்பகோணம் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டனர். மேலும், இவ்வழக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலூரில் விசிக கொடிக் கம்பம் இரவோடு இரவாக அகற்றம்.. சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.