ETV Bharat / state

திருப்பனந்தாள் பெரியநாயகி செஞ்சடையப்பர் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு! - Thiruppanandal periyanayaki kovil

கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் பெரியநாயகி உடனாகிய செஞ்சடையப்பர் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

20 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பனந்தாள் பெரியநாயகி செஞ்சடையப்பர் கோயில் கும்பாபிஷேகம்

author img

By

Published : Jul 8, 2023, 10:44 AM IST

Updated : Jul 8, 2023, 11:05 AM IST

20 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பனந்தாள் பெரியநாயகி செஞ்சடையப்பர் கோயில் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் பெரியநாயகி உடனாகிய செஞ்சடையப்பர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று (ஜூலை 7) சிறப்பாக நடைபெற்றது. இதில், தருமபுர ஆதீன 27வது குருமணிகள் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூர்யனார் கோயில் ஆதீன குருமகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசித்திருமட அதிபர் முத்துகுமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவபிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்பட பல்வேறு ஆதீனங்கள், குருமகா சன்னிதானங்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்

கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் பெரியநாயகி உடனாகிய செஞ்சடையப்பர் திருக்கோயில், திருக்கயிலாயப்பரம்பரை தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான 27 திருக்கோயில்களில் ஒன்றாகும். தேவார பதிகம் பெற்ற சிறப்புடைய கோயில் தல விருட்சம் பனை மரமாகும். இக்கோயில் அம்பிகை அருந்தவம் இருந்து சிவபெருமானிடம் ஞானோபதேசம் பெற்றதும், இந்திரனின் சாபத்தால், ஐராவத யானை நாரதரின் சொற்படி, இக்கோயில் தடாகத்தில் நீராடி, செஞ்சடையப்பரை வழிபட்டு தன் முன்னுருவம் பெற்றதாக கூறப்படுகிறது.

‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ எனும் குறளுக்கு ஏற்ப இக்கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தி, தாடகையின் அன்பிற்கிணங்கி, திருமுடியை சாய்த்து மலர் மாலையினை ஏற்றுக் கொண்டதும், குங்குலிய நாயனாரின் அன்பிற்கு இணங்கி தலை நிமிர்ந்தார் என்பதும் இதன் புராணம்.

இந்தக் கோயிலில் வாசுகியின் மகளான சுமதி எனும் நாக கன்னிகை வழிபட்டு, அரித்துவசன் எனும் மன்னனை மணந்து, பின்னர் இங்கு பல்வேறு திருப்பணிகள் செய்து, நிறைவாக முக்தியும் பெற்றார்கள். இந்தக் கோயிலுக்கு இதற்கு முன்பு கடந்த 1968 மற்றும் 2003ஆம் ஆண்டுகளிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை 7) காலை 9.15 மணி முதல் 9.45-க்குள் சஷ்டி திதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெற்றது.

இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 2ஆம் தேதி மண்ணியாற்றில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு, யாகசாலை பூஜைகள் கடந்த 3ஆம் தேதி அன்று மாலை முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று 8ஆம் கால யாக பூஜைகள் நிறைவில் மகா பூர்ணாஹீதியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து நாதஸ்வர மேள தாளம் மற்றும் நந்தி வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும், அதனைத் தொடர்ந்து விமானங்களில் உள்ள கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, தருமபுர ஆதீன குருமகா சன்னிதானம், பல்வேறு ஆதீனங்கள், குருமகா சன்னிதானங்கள் மற்றும் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க 20 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், சண்டயாகமும் நடைபெற்று, இரவு திருக்கல்யாணமும் அதனையடுத்து, சுவாமி திருவீதியுலாவும், பின்னர் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகமும் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: திருமணமான மறுநாளில் குழந்தைக்கு பிறந்தநாள் விழா: அண்ணாமலை தலைமையில் நடந்த கல்யாண கலாட்டா!

Last Updated : Jul 8, 2023, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.