தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சுற்றியுள்ள 12 சிவாலயங்களில் மாசிமகா பெருவிழாவையொட்டி இன்று மகாமகம் குளக்கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தின் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கொடி கம்பத்திற்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் திருமுழுக்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நந்தி உருவம் பொறித்த திருக்கொடியினை ஏற்றி சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
பின்னர் மூலவர் சுவாமிக்கும் தீபாராதனை செய்யப்பட்டது. இதேபோல ஸ்ரீ கவுதமேஸ்வரர் ஆலயத்திலும் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். மேலும் எதிர்வரும் மார்ச் 8ஆம் தேதி மகாமகம் குளத்தில் மகாமக தீர்த்தவாரி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கோழிக்கழிவுகளை கொட்ட வந்த கேரள லாரி - மடக்கிப் பிடித்த பொதுமக்கள்