தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயிலிலுள்ள, ஸ்ரீமங்களாம்பிகைக்கு 1500 கிலோவுக்கும் அதிகமான ரோஜா, மல்லி, முல்லை, அரளி, ஆகிய நறுமணமிக்க மலர்களால் புஷ்பாபிஷேகம் நடைபெற்று. ஸ்ரீமங்களாம்பிகைக்கு தேவையான மலர்களை 500க்கும் மேற்பட்ட பெண்கள் கூடைகளில் கொண்டு வந்தனர்.
பக்தர்கள் கொண்டுவந்த மலரைக் கொண்டு ஸ்ரீமங்களாம்பிகைக்கு புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீமங்களாம்பிகையை புஷ்பாபிஷேகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்து அருள்பெற்றனர்.