தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள மேலகொட்டையூரில் அரசு கவின் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்கள் தங்கி ஓவியம், அதனைச் சார்ந்த வகுப்புகளில் பயின்றுவருகின்றனர். இந்நிலையில், இவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவார்கள் உணர்வு என்ற தலைப்பில் ஓவியக்கண்காட்சி இன்று தொடங்கியது.
இதில், 53 மாணவர்களின் திறமையால் வரைந்த 143 ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இந்த ஓவியங்கள் உணர்ச்சிகள், நாம் அன்றாடம் பார்த்த காட்சிகள், வாழ்க்கையின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளன.
கிராமப்புறத்தில் சமையல் செய்வது ஆன்மிகம், பரதம், பழைய கலாசாரம், தமிழர் பண்பாடு உள்ளிட்ட பல்வேறு விதமான வண்ண ஓவியங்கள் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: