தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் எஸ்.எஸ் நகரைச் சேர்ந்தவர் ஹேமா(40). இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், வீட்டை பூட்டிவிட்டு ஹேமா வெளியே சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் கதவை உடைத்துக்கொண்டு வீட்டினுள் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதையடுத்து காலை ஹேமா வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதேபோல், அப்பகுதியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் 8 சவரன் நகை, வெள்ளி குத்து விளக்கு, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் காவல் துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு காவல் துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க:
கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை!