தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி நடவு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 80 ஆயிரம் ஹெக்டேர் மேல் நடவு பணிகள் முடிவடைந்துள்ளன.
நடவு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் பாரம்பரிய முறைப்படி பாட்டு பாடியும், நடனமாடியும் நடவு பணியில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்கள் பழைய முறைப்படி எருதுகளை ஏரில் பூட்டி உளவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் 10 நாட்களில் சம்பா நடவு பணிகள் நிறைவடையும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதிவரை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உரம், இடுபொருட்கள் தேவையான அளவு அரசு வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் குறுவை சாகுபடியை போலவே சம்பா சாகுபடியும் இலக்கை விஞ்சி செய்ய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கான அடிப்படை ஆதார விலை உயர்வு - மத்திய அரசு