ETV Bharat / state

'தஞ்சை To தாய்லாந்து' கராத்தே போட்டியில் சாதித்த தமிழர்! - முன்மாதிரியாக இருக்க வேண்டும்

தாய்லாந்தில் நடைபெற்ற கராத்தே மாஸ்டர்ஸ் போட்டியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். அவருக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

’தஞ்சை To தாய்லாந்து’: வெண்கலம் வென்று சாதனை படைத்த கராத்தே மாஸ்டர்

author img

By

Published : Feb 9, 2023, 10:03 AM IST

’தஞ்சை To தாய்லாந்து’: வெண்கலம் வென்று சாதனை படைத்த கராத்தே மாஸ்டர்

தஞ்சாவூர்: தாய்லாந்து நாட்டில் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தில் (3rd - OPEN MASTERS GAMES) தாய்லாந்து ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நடைபெற்றது. குமித்தே (சண்டை) 45 - 49 வயது VETERAN பிரிவில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பொய்யுண்டார் கோட்டையைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் அன்பரசன்(46) என்பவர் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் (Bronze medal) வென்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளார்.

இந்நிலையில் வெற்றி பெற்ற கராத்தே மாஸ்டர் அன்பரசன் தனது சொந்த ஊருக்கு வந்ததையடுத்து அவரது நண்பர்கள், கராத்தே வீரர்கள் மற்றும் கிராம மக்கள் என அனைவரும் தஞ்சைக்கு வருகை தந்து அவருக்குச் சால்வை மற்றும் சந்தன மாலை, ரோஜாப்பூ மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பரசன், "வருங்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த போட்டியில் கலந்து கொண்டதாகவும், வரும் காலங்களில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டாயம் கராத்தே கற்றுத் தர வேண்டும், கராத்தே கற்றுக் கொடுத்தால் ஒழுக்கமாகவும் நல்ல முறையிலும் வளருவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: எருமை மாடுகள் வளர்க்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.