தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 22) மாலை காரைக்காலில் தொடங்கிய மழையானது இரவு முழுவதும் தொடர்ந்து பெய்தது. இந்தத் தொடர் கனமழையின் காரணமாகக் காரைக்கால் கடற்கரையில் அலைகளின் சீற்றம் அதிகரித்துக்கொண்டே வந்ததால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் எனக் காவல் துறையினரின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்லாததால் காரைக்கால் கடற்கரை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க: நாகப்பட்டினம் - காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்