ETV Bharat / state

குடிமராமத்து பணிகளில் முறைகேடு: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!

தஞ்சாவூர்: கடந்த நான்கு ஆண்டுகளில் குடிமராமத்துப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 10 விழுக்காடு அளவிற்கான பணிகள் கூட நடைபெறவில்லை என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

jawahirullah-press-meet
author img

By

Published : Aug 18, 2019, 10:04 PM IST

Updated : Aug 19, 2019, 12:26 AM IST

கும்பகோணத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஆவின் பால் கொள்முதல், விற்பனை விலையை தற்போது தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. ஆவின் நிர்வாகத்தை முறைகேடு இல்லாமல் நடத்தினாலே பால் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த பால் விலை உயர்வு நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். தற்போது தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக குடிமராமத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 10 விழுக்காடு அளவிற்கு கூட பணிகள் ஏதும் நடைபெறவில்லை. குடிமராமத்து பணிகளில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

ஜவாஹிருல்லா பேட்டி

காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை நடைமுறை படுத்த மாநில அரசு முயற்சிக்கிறது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தால் மட்டுமே இது போன்ற திட்டங்களின் மூலம் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க முடியும்’ என தெரிவித்தார்.

Intro:தஞ்சாவூர் ஆக 18Body:தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது:

காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டங்கள் முத்தலாக் சட்டம், காஷ்மீர் மாநில் அந்தஸ்து பறிப்பு சட்டம் ஆகிய சட்டங்களுக்கு கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டம்  நடத்த உள்ளோம்.
இந்த சட்டங்களினால் காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. முன்னால் முதல் அமைச்சர்கள் வீட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 37-0 சட்டபிரிவை ரத்து செய்த  மத்திய அரசு 371&வது பிரிவையும் ரத்து செய்ய வேண்டும்.  தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை காஷ்மீரில் நுழைய வைப்பதற்காக  இது போன்ற சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  தொழிலதிபர் அம்பானி காஷ்மீரில் முதலீடு செய்யப்போகிறோம் என அறிவிக்கிறார். பிரதமர் மோடி ஒட்டுமொத்த நாட்டையும் கார்பரேட் முதலாளியிடம் விற்க முடிவு செய்துள்ளார். இதன £ல் மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்படும். 

முத்தலாக் சட்டம் சிவில் சட்ட வடிவில் இருந்தது தற்போது கிரிமினல் குற்றவடிவ சட்டமாக மாற்றியுள்ளனர். அதற்கு 3 ஆண்டு தண்டனை என்பது ஏற்க முடியாதது. மற்றொரு சட்டத்தின் தனிநபர் பயங்கரவாதி என்று அறிவிக்க அந்த சட்டத்தில் வழிவகை உள்ளது.  எந்த ஜனநாயக நாட்டிலும் இதுபோன்ற அவலங்கள் இல்லை. பல சட்டங்கள் மூலம் மாநில  உரிமைகளை பறித்துள்ளனர். ஆட்கடத்தல், கள்ளநோட்டு அடித்தல் போன்ற குற்றங்களுக்கு மாநில காவல்துறை தான் இதுவரை விசாரித்தது. புதிய சட்டங்கள் மூலம் இந்த குற்றங்களுக்கான விசாரணை மத்திய அரசின் கீழ் வரும்  என்று அறிவிததுள்ளனர். இது மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. 

இவற்றையெல்லாம் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் மனிதநேய மக்கள் கட்சியும் இணைந்து ஆகஸ்ட் 25 அன்று திருச்சி, மதுரை, சென்னை, திருப்பூரில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

மேட்டூர் அணையை திறக்கும்  விஷயத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுயநலத்துடன் செயல்பட்டுள்ளார். தனது மாவட்டங்களுக்கு தண்ணீரை முதலில் திறந்துவிட்டு  உபரிநீரை காவிரி டெல்டா பகுதிக்கு திறந்துள்ளார் இந்த விஷயத்தில் அவர் சுயநல போக்குடன் நடந்து உள்ளார்.

குடி மராமத்து பணிகளில் தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக ஒதுக்கிய தொகையில் 10 சதவீதம் கூட வேலை நடைபெறவில்லை இதில் முறைகேடு நடந்துள்ளது தமிழக வேளாண் ம £வட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தால் தான் இந்த பகுதியில் உள்ள கனிம வளங்களை யாரும் கொள்ளையடிக்க முடியாது. எனவே காவிரி டெல்டாவை பாதுக £க்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். 
தமிழக அரசு மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு நாங்கள் தமிழகத்தில் இடமளிக்க மாட்டோம் என்று சொன்னார்கள். ஆனால்  தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன்  திட்டங்களை தொடங்க மாநில அரசு ஆதரவளித்து வருகிறது.  எடப்பாடி பழனிச்சாமியின் மாநில அரசு மத்திய அரசின் அடிமை போல் நடந்து வருகிறது எனக் கூறலாம்.
இதனால் தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவே இந்த திட்டங்களை உடனே கைவிட வேண்டும். அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் மனிதர்கள் வாழாத  இடங்களில்தான் மீத்தேனை எடுக்கிறார்கள் பா.ஜ.க. அரசு ஆட்சியின் காரணமாக இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் இந்திய ரூபாயின்  மதிப்பு சரிந்துள்ளது.   மேலும் பா.ஜ.க. அரசின்  பல திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. இதனால் இந்தியாவின் வளர்ச்சி தடைபடும். இவ்வாறு அவர் கூறினார். Conclusion:Tanjore sudhakaran 9976644011
Last Updated : Aug 19, 2019, 12:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.