உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கரோனா வைரஸை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் அருள்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில், தன்னார்வ இளைஞர்களுக்கு கரோனா விழிப்புணர்வு குறித்தும் பொதுமக்களை தன்னார்வலர்கள் எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்தும் காவல் ஆய்வாளர் அருள்குமார் விளக்கினார். மேலும், தன்னார்வலர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் என சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: டிக்டாக் பார்த்து சாராயம் காய்ச்சிய இருவர் - காவல்துறை வழக்குப்பதிவு!