நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடந்த குழந்தைகள் விற்பனை சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக தஞ்சாவூரில் பேட்டி அளித்த சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், குழந்தைகள் திருட்டைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உருவாக்கிட வேண்டும் எனவும், ரத்த வங்கிகளை நவீனப்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவ தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.