ETV Bharat / state

thanjavur medical college: இறந்த நிலையில் குழந்தை உடல் மீட்பு - தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு கழிவறை தண்ணீர் தொட்டியில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையின் உடல், தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்டது.

thanjavur medical college hospital  infant body found in thanjavur medical college hospital  infant body found in thanjavur  இறந்த நிலையில் குழந்தை உடல் மீட்பு  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை மீட்பு
இறந்த நிலையில் குழந்தை உடல் மீட்பு
author img

By

Published : Dec 4, 2021, 8:29 PM IST

தஞ்சாவூர்: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின் கழிவறையை சுத்தம் செய்ய இன்று (டிசம்பர். 3) துப்புரவு தொழிலாளிகள் சென்றுள்ளனர். அப்போது கழிவறை தண்ணீர் தொட்டியில் தொப்புள் கொடியுடன் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது.

இதனைக்கண்ட துப்புரவு தொழிலாளர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததனர். உடனடியாக கல்லூரி முதல்வர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் கபிலன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இறந்த நிலையில் குழந்தை உடல் மீட்பு

மேலும் இன்று (டிசம்பர் 4) காலை அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைக்கு சென்ற ஒரு பெண் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்துள்ளார். அந்த பெண் யார், அந்தப் பெண் குழந்தையை பெற்றெடுத்து அங்கு விட்டு சென்றாரா அல்லது குழந்தையை கொன்று தொட்டியில் வைத்து சென்றாரா என்ற கோணங்களில் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: என்னை ஏமாத்திட்டான் - காதலன் மீது பிக்பாஸ் ஜூலி புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.