ETV Bharat / state

இந்து, முஸ்லிம்கள் இணைந்து வழிபடும் திருத்தலம்! பட்டுக்கோட்டையில் விநோதம் - இருமத்தவர் வழிபடும் கோயில்

தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ள கோயில் ஒன்றில் இந்துக்கள், முஸ்லிம்கள் என இரு மதத்தினரும் இணைந்து வழிபாடு செய்துவருவது மத நல்லிணக்கத்துக்கான செயலாகவே பார்க்கப்படுகிறது.

காட்டு கோயில்
author img

By

Published : Apr 20, 2019, 4:32 PM IST

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள பாதிரங்கோட்டை தெற்கு கிராமத்தைச் சேர்ந்த அனந்த கோபாலபுரம் என்ற இடத்தில் 'காட்டு கோயில்' என்ற பெயரில் ஒரு கோயில் உள்ளது.

இதில், இந்துக்கள் வழிபடும் அய்யனார், கருப்பசாமி, வீரனார், செல்லையா போன்ற வழிபடக்கூடிய சாமிகளும், அதன் அருகிலேயே முஸ்லிம்கள் வழிபடக்கூடிய தர்காவும் உள்ளன.

இந்த தர்காவில் பெரிய ராவுத்தர், சின்ன ராவுத்தர், பாப்பாத்தி அம்மாள், மரைக்காயர் என்ற பெயரில் சாமி சிலைகள் உள்ளன. இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பகுதியில் ராவுத்தர் என்பவர் வியாபார நோக்கில் இங்கு வந்தபொழுது இந்த அய்யனார் இருந்த இடத்திற்கு அருகிலேயே தங்கியிருந்ததாகவும் பின்னர் அவர் அய்யனாரின் மீது பற்றுக்கொண்டு அதே இடத்தில் ஐக்கியமாகி விட்டதாகவும் வரலாறு உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பவுர்ணமி நாளன்று சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இந்துக்கள், முஸ்லிம்கள் என ஏராளமானோர் இக்கோயிலுக்கு வந்து சாமிகளை தரிசித்துவிட்டுச் செல்கின்றனர்.

இந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து இந்தக் கோயிலில் வழிபடுவது மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயலாகக் கருதுகின்றனர் இங்குள்ள ஆன்மிகவாதிகளும், பொதுமக்களும்.

இதைக் காண்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் இங்கு வருகின்றனர். இந்தக் கோயில் 20 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் அமைந்தக் கோயில் ஆகும். இதில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன என்பது மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.

இந்து முஸ்லீம்கள் வழிபடும் காட்டு கோயில்

Intro:இந்து முஸ்லிம் இணைந்து வழிபடும் கோயில் பட்டுக்கோட்டை அருகே வினோதம்

Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பாதிரங்கோட்டை தெற்கு கிராமத்தைச் சேர்ந்த அனந்த கோபாலபுரம் என்ற இடத்தில் காட்டு கோயில் என்ற பெயரில் ஒரு கோயில் உள்ளது இதில் அய்யனார் கருப்பசாமி வீரனார் செல்லையா போன்ற ஹிந்துக்கள் வழிபடக்கூடிய சாமிகளும் அதேவேளையில் இதன் அருகிலேயே முஸ்லிம்கள் வழிபடக்கூடிய தர்காவும் உள்ளது இந்த தர்காவில் பெரிய ராவுத்தர், சின்ன ராவுத்தர், பாப்பாத்தி அம்மாள் மற்றும் மரைக்காயர் என்ற பெயரில் சுவாமி சிலைகள் உள்ளன இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது ஜமீன் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும் இந்த பகுதியில் ராவுத்தர் என்பவர் வியாபார நோக்கில் இங்கு வந்த பொழுது இந்த அய்யனார் இருந்த இடத்திற்கு அருகிலேயே தங்கியிருந்ததாகவும் பின்னர் அவர் அய்யனாரின் மீது பற்றுக்கொண்டு அதே இடத்தில் ஐக்கியமாகி விட்டதாகவும் வரலாறு உள்ளது என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமி நாளன்று சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என இக்கோயிலுக்கு வருகை தந்து சாமிகளை தரிசித்து விட்டு செல்கின்றனர் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து இந்த கோயிலில் வழிபடுவது மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயலாக கருதுகின்றனர் ஆன்மீகவாதிகள்மற்றும் பொதுமக்கள். இதை காண்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களும் வருவது குறிப்பிடத்தக்கது இந்த கோயில் 20 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் அமைந்த கோயில் ஆகும் இதில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன என்பது மேலும் சிறப்பம்சம்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.