ETV Bharat / state

300ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள் - thanjavur district news

தஞ்சாவூர் அருகே, காசவளநாடு புதூர் கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடி வருவது மத நல்லிணக்கத்திற்கு சான்றாக உள்ளது.

hindus-celebrating-islamic-festival-muharram-more-than-300-years-in-thanjavur
300ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள்
author img

By

Published : Aug 20, 2021, 9:00 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகேயுள்ள காசவளநாடு புதூர் கிராமத்தில், இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகை வெகுவிமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தப் பண்டிகையை கொண்டாடுபவர்களில் பெரும்பாலோனார் இந்துக்களே.

அவ்வூரின் இருந்த முன்னோர்களின் வழிகாட்டுதலின் படி, தற்போது அக்கிராமத்தில் உள்ள 5 இஸ்லாமிய குடும்பங்களுடன் சேர்ந்து, மொகரம் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடிவருகின்றனர்.

இஸ்லாமியர்கள் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள்

இந்தப் பண்டிகையையொட்டி, 'அல்லா சாமி' என்ற அழைக்கப்படும் உள்ளங்கை உருவத்தை ஊரின் மையத்தில் இருக்கும் சாவடியில் இருந்து வெளியே எடுத்து அதற்கு பத்து நாள்கள் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் இவ்வூர் மக்கள். பூஜை நடக்கும் பத்து நாளும் விரதம் இருக்கும் இவ்வூர் மக்கள், நேற்று இரவு உள்ளங்கை உருவத்தை வீதியுலவாக எடுத்துவந்தனர்.

அப்போது, பெண்கள் வீடுகளில் புதிய மண் கலயத்தில் பானகம் கரைத்து, அவல், தேங்காய், பழம் வைத்து அல்லாவுக்கு படையிலிட்டு வழிபட்டனர். மேலும், அல்லா கோயில் முன் தீ மிதி திருவிழாவும் நடந்தது. இதில், ஏராளமானோர் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்ற வேண்டி தீ மிதித்து அல்லாவை வழிபட்டனர்.

இதேபோல், மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்திலும் மொகரம் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடியுள்ளனர். அவ்வூரில் உள்ள பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு தீ மிதி திருவிழாவையும் அவர்கள் நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்களுக்கு உணவளித்த இஸ்லாமிய சகோதரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.