தஞ்சாவூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டியில் கடந்த 4ஆம் தேதி, திருவள்ளுவர் சிலை மீது சமூக விரோதிகள் கறுப்பு மை வீசி அவமரியாதை செய்தனர். இது அப்பகுதியிலுள்ள தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை கண்டித்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியினர் திருவள்ளுவர் சிலைக்கு பூமாலை, காவி உடை, ருத்ராட்சம் அணிவித்து வழிபாடு நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்க: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு... அடுத்த பிரச்னையை கிளப்பிய அர்ஜூன் சம்பத்!