ETV Bharat / state

கும்பகோணத்தில் ருசிகரமான பாரம்பரிய உணவு திருவிழா

கும்பகோணத்தில் தானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இன்று (செப். 04) நடந்த உணவு திருவிழா ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 4, 2022, 8:12 PM IST

தஞ்சாவூர்: தற்போது உள்ள காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில் மக்களின் பல்வேறு பழக்கவழங்களும் மாறிவருகிறது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று உணவு பழக்கவழங்கள் அதிகளவில் மாறியுள்ளது. இவ்வாறு மாறி வரும் உணவு பழக்கங்களினால் தாது உப்புக்கள் நிறைந்த, சிறு தானிய உணவு வகைகளை இன்று மறந்து போனோம்.

இதன் விளைவாக நீரழிவு நோய், இரத்த கொதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு நாம் அதிக எண்ணிக்கையில் ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நோய்களை தவிர்த்திடும் வகையில் அன்றாட உணவில் கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, சோளம் போன்ற ஏதேனும் ஒரு சிறு தானியங்களை உணவாக எடுத்துக் கொள்ளும்போது அனைத்து வகை நோய்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ள வழி உண்டு.

அதன்படி, இந்த உணவு வகைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கும்பகோணத்தில் இன்று (செப்.4) உணவு திருவிழா நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவில் கம்பு ,கேழ்வரகு ,சாமை, திணை, சோளம் ஆகியவைகளில் தயாரித்த உணவு பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

ருசிகரமான பாரம்பரிய உணவு திருவிழா

குறிப்பாக சாமை தோசை, திணை அல்லா, கதம்ப பொரியல், கேழ்வரகு வெங்காய பக்கோடா, வரகு சாம்பார் சாதம், சாமை தயிர் சாதம், நெல்லிக்காய் பச்சடி ஆகியவை இரவு உணவாக வழங்கப்பட்டது இவற்றை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி ருசித்து ரசித்தனர் வாங்கி சாப்பிட்டனர்.

இதையும் படிங்க: பாளையங்கோட்டையில் களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.