ETV Bharat / state

பயோ பிளாஸ்டிக்கை கண்டுபிடித்து அரசுப்பள்ளி மாணவி அசத்தல்! - அரசுப்பள்ளி மாணவி அர்ச்சனா

தஞ்சாவூர் : அரசுப்பள்ளி மாணவி அர்ச்சனா முற்றிலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு 28 நாட்களுக்குள் மக்கும் தன்மை கொண்ட பயோ பிளாஸ்டிக்கை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

gvt school girl bio plastic
author img

By

Published : Nov 15, 2019, 7:41 PM IST

தஞ்சை மாவட்டம் சங்கரன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாணவி அர்ச்சனா. இவர் ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாடு அரசினர் உயர் நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

பொருளாதாரச் சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தின் மகளான ஏழை மாணவி அர்ச்சனா, தமிழ்நாடு அரசு சார்பில் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு வரும் நெகிழி இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வால், நெகிழிக்கு மாற்றாக ஏதேனும் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என எண்ணி வந்தார். இதைத் தொடர்ந்து அந்த மாணவி மக்காச்சோள மாவு மற்றும் வினிகர் ஆகியவற்றைக் கொண்டு பயோபிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க முடிவு செய்து, தனது அரசுப் பள்ளி ஆசிரியை ஜென்சிரூபா, தலைமை ஆசிரியர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி இயற்கைப் பொருட்களான மக்காச்சோளமாவு, தண்ணீர், வினிகர், க்ளிசரின் ஆகியவற்றைச் சேர்த்து அதை சுடவைத்து ஒரு கலவையைத் தயார் செய்தபோது அதில் (பயோ - பிளாஸ்டிக்) உயிரி நெகிழி கிடைக்க, அதனைக் கொண்டு காகிதம், சிறிய தட்டு, கிண்ணம் ஆகியவற்றை செய்து உள்ளார்.

கரூரில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இந்த பயோ பிளாஸ்டிக் முதல் பரிசைப் பெற்றது. மேலும், தமிழ்நாடு அரசு இதனை இந்திய அரசுக்குப் பரிந்துரையும் செய்து உள்ளது. இதன் மூலம் ஒரு பை தயாரிக்க ஆகும் செலவு 25 பைசா மட்டுமே, இது நான்கு கிலோ எடையைத் தாங்கக் கூடியதாக இருக்கும்.

பயோ பிளாஸ்டிக் கண்டுபிடித்த அரசுப்பள்ளி மாணவி அர்ச்சனா

இந்த பயோ பிளாஸ்டிக் பொருள் 28 நாட்களில் மக்கும் தன்மை கொண்டது. இதனை கால்நடைகள் உட்கொண்டால் அவற்றுக்கு தீங்கு ஏற்படாது. மேலும் இயற்கையும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

தஞ்சை பெரியகோயில் பராமரிப்பு... தொல்லியல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Intro:தஞ்சாவூர் நவ 15

மக்காச்சோளம் போன்ற
முற்றிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு 4 கிலோ வரை எடை தாங்கக்கூடிய, 28 நாட்களுக்குள் மக்கும் தன்மை கொண்ட பயோ பிளாஸ்டிக் கண்டுபிடித்த அரசுப்பள்ளி மாணவி அர்ச்சனா குறித்த சிறப்பு செய்தி

tn_tnj_spl_story__voice_over_gvt_school_girl_bio_plastic_vis_script_7204323Body:
மக்காத பிளாஸ்டிக் கடவுளின் கொடை இயற்கைக்கும் சுற்றுச்சூழ்கும் கேடு விளைகிறது, அதை தெரியாது உட்கொள்ளும் கால்நடைகள் உயிருக்குகே ஆபபத்தாக முடிகிறது, பிளாஸ்டிக் உணவுகளுடன் சேருவதால் உட்கொள்ளூம் போது மனித உடல் நலத்திற்கும் கேடினை தருகிறது
இதற்கு மாற்றாக உயிரி நெகிழியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் தஞ்சாவர் மாவட்ட அரசு பள்ளி மாணவி.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பநாடு அருகே சங்கரன்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாணவி அர்ச்சனா, ஒரு வயது இருக்கும்போதே தந்தை சிவானந்தம் இறந்துவிட, அதன் பின் தாய் அபூர்வம் கூலித் தொழில் செய்து வளர்த்துந்துள்ளார்,
தற்போது மாணவி அர்ச்சனா ஓரத்தநாடு அருகேயுள்க பாப்பாநாடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்,
பொருளாதார சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தின் மகளான
ஏழை மாணவி அர்ச்சனா தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு வரும் நெகிழி இல்லா தமிழகம் விழிப்புணர்வால்
நெகிழிக்கு மாற்றாக ஏதேனும் ஒன்றை தயாரிக்க வேண்டும் என எண்ணிய மாணவி மக்காச்சோள மாவு மற்றும் வினிகர் ஆகியவற்றைக் கொண்டு பயோபிளாஸ்ட்டிக்கை கண்டுபிடிக்க முடிவு செய்து தனது அரசு பள்ளி ஆசிரியை ஜென்சிரூபா, தலைமை ஆசிரியர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார்,
அதன்படி இயற்கை பொருட்களான மக்காச்சோளமாவு,தண்ணீர், வினிகர், க்ளிசரின் ஆகியவற்றை சேர்த்து அதை சுடவைத்து ஒரு கலவையை தயார் செய்தபோது அதில் (பையோ - பிளாஸ்டிக்) உயிரி நெகிழி
கிடைக்க
அதனைக் கொண்டு காகிதம், சிரிய தட்டு, கிண்ணம் ஆகியவற்றை செய்து உள்ளார்,
கரூரில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இந்த பையோ பிளாஸ்டிக் முதல் பரிசைப் பெற்றது, மேலும் தமிழக அரசு இதனை இந்திய அரசுக்கு பரிந்துரையும் செய்து உள்ளது
இதன் மூலம்
ஒரு பை தயாரிக்க ஆகும் செலவு 25 பைசா மட்டுமே ஆகுமாம்,
இது 4 கிலோ எடையை தாங்க கூடியதாக இருக்கும்.
இந்த பையோ பிளாஸ்டிக் பொருள் 28 நாட்களில் மக்கும் தன்மைகொண்டது. இதனை கால்நடைகள் உட்கொண்டால் அவற்றுக்கு தீங்கு ஏற்படாது. மேலும் இயற்கையும் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
முற்றிலும் இயற்கை பொருட்களை மட்டுமே கொண்டு இவ்வகை பையோ பிளாஸ்டிகை மாணவி தயார் செய்து உள்ளாதால். இது இயற்கைக்கு உகந்ததாக இருக்கும்.
இப் பையோ பிளாஸ்டிக் பொருளை மத்திய மாநில அரசுகள் அங்கீகரித்தால் இது பொதுமக்களுக்கு முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும்
பிளாஸ்டிக் என்ற கொடூரனால் இயற்கை அன்னை பாதிக்கப்பட்ட வரும் நிலையில் இந்த அரசு பள்ளி மாணவியின் கண்டுபிடிக்கப்பு அதை மாற்றி அமைக்கும்.

பேட்டி 1: அர்ச்சணா அரசு பள்ளி மாணவி பாபாநாடு

பேட்டி 2 : ஜென்ஸ் ரூபா மைக்ரோ பயாலஜி ஆசிரியர் பாபாநாடு அரசு பள்ளி

Conclusion:Tanjore Reporter sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.