திருவையாறு தியாகராஜர் பிரம்ம சபாவின் தலைவராக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் மாமேதை அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிலையை யார் உடைத்தார்கள் என்பதை அரசும், காவல் துறையினர் இனம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்துவருகிறது. 70 ஆண்டுகால பிரச்னையை 70 நாட்களில் தீர்க்கமுடியாது, படிப்படியாகத்தான் அதற்கான தீர்வு காண முடியும் என்றார்.
மேலும் பேசிய அவர், ‘தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும்’ எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.