தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜரின் 173ஆவது ஆராதனை விழா வருகிற ஜனவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘உள்ளாட்சியில் நல்லாட்சி மலர உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உண்மையாக நடத்த வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது. ஆனால் திமுக அதனை விரும்பவில்லை. அதன் உண்மை நிலவரம் நேற்று நீதிமன்ற விவாதத்தில் தெரியவந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நான்கு பேர் தெலங்கானாவில் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பேசிய அவர், ‘பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லைகள் கொடுப்பவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள அனைவரின் விருப்பமாகும். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தமாகாவின் கோரிக்கையாக உள்ளது’ என்றார்.
இதையும் படிங்க: 'மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட்டால் மக்கள் பார்த்து கொள்வார்கள்' - ஜி.கே.வாசன்