திருக்காட்டுப்பள்ளி அருகே மணல் குவாரியில் மணல் எடுத்ததால் அந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் குளித்துவிட்டு வந்த பள்ளி மாணவி தடுமாறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் மாலினி (10). இவர் திருச்சியில் உள்ள நாகமங்கலத்தில் 5ஆம் வகுப்பு படித்துவந்தார். விடுமுறை காரணமாக வீடான திருச்செனம்பூண்டி புது பாலத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்து தங்கிஉள்ளார்.
இந்நிலையில் மாலை கொள்ளிடம் ஆற்றில் மாலினி உள்பட இரண்டு குழந்தைகள் குளிப்பதற்காகச் சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் அப்பகுதியில் மணல் குவாரிக்காக மண் எடுக்க பறிக்கப்பட்ட குழியில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை கோவிலடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மாலினி முன்பே உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாலினியின் தாயார் அம்பிகாபதி தோகூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாலினியின் உடலை கைப்பற் உடற்கூறு ஆய்வுக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று அப்பகுதி மக்கள் போராட்டம் செய்துவந்த நிலையில் அந்த இடத்தில் உள்ள பள்ளத்தில் 10 வயது சிறுமி விழுந்து உயிர் இழந்த நிலை ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "கரோனாவை கட்டுப்படுத்த மூன்றடுக்கு சிகிச்சை மையங்கள்"- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்