ETV Bharat / state

பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம்.. தொப்பி வாப்பாவின் அதிரடி ஆஃபர்! - தஞ்சாவூர்

பக்கெட் பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம் என்று தஞ்சாவூர் தொப்பி வாப்பா கடையில் வெளியிடப்பட்ட அறிவிப்பால், ஏராளமானோர் ஆர்வமாக வந்து பிரியாணி வாங்கிச் சென்றனர்.

thoppi vappa tomato offer
தொப்பி வாப்பாவின் அதிரடி ஆப்ஃர்
author img

By

Published : Jul 14, 2023, 7:15 PM IST

Updated : Jul 14, 2023, 10:48 PM IST

பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம்

தஞ்சாவூர்: கடந்த சில வாரங்களாக பல மாநிலங்களில் கடும் வெள்ளம், தொடர் மழை காரணமாக, காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து, அடித்தட்டு மக்கள் முதல் உயர்வகுப்பு மக்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தக்காளி விலை ராக்கெட் போல் உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. கிலோ ரூபாய் 50, 80, 100, 120 என தற்போது ரூபாய் 140 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விற்பனைக்கு தனியார் பாதுகாவலர்களை வைத்து விற்பனை செய்த சம்பவங்கள் எல்லாம் நாட்டில் அரங்கேறியது. தக்காளி கூடுதல் தொகைக்கு விற்பனை ஆகி பல லட்சம் வருவாய் ஈட்டிய நிலையில், அதில் ஏற்பட்ட தகராறில், அண்டை மாநிலத்தில் ஒரு கொலை கூட நிகழ்ந்துள்ளது என்றால், தக்காளி நாடு தழுவிய அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதனை உணரவும் அறியவும் முடியும்.

இந்நிலையில், கும்பகோணம் ரயில் நிலையம் அருகே, காமராஜர் சாலையில் உள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடை நிர்வாகம், தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஓர் அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த ராக்கெட் வேக தக்காளி விலையை நூதன விளம்பர யுக்தியாகப் பயன்படுத்தி, காண்போரையும், வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் 5 பேர் உண்ணும் அளவிலாக ரூபாய் 1,100 மதிப்பிலான பக்கெட் சிக்கன் பிரியாணி மற்றும் ரூபாய் 1,400 மதிப்பிலான பக்கெட் மட்டன் பிரியாணி வாங்குவோருக்கு தலா ஒரு கிலோ தக்காளி இலவசம் என அறிவித்தது.

அதுபோலவே 3 பேர் உண்ணும் அளவிலான 520 ரூபாய் மதிப்பிலான பக்கெட் சிக்கன் பிரியாணி வாங்குவோருக்கும், ரூபாய் 820 மதிப்பிலான பக்கெட் மட்டன் பிரியாணி வாங்குவோருக்கும் தலா அரை கிலோ தக்காளி இலவசம் என்றும், அனைவரையும் கவரும் வகையில் விளம்பரம் செய்துள்ளது.

இதனைக் கண்டு, போட்டி போட்டுக் கொண்டு நீண்ட வரிசையில் வந்து பக்கெட் பிரியாணியை இலவச தக்காளியோடு ஆர்வமாக வீட்டிற்கு வாங்கிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகத்தின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து வைத்துக் கொண்டு, யாரும் எதிர்பார்க்காத இத்தகைய நூதன விளம்பர யுக்திகளைப் பயன்படுத்தி அதன் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு சொற்ப தொகை செலவில் விளம்பரங்கள் தேடிக் கொண்டு பயன்பெறுகின்றன. இப்படிப்பட்ட இலவசங்கள் தந்து, இதன் மூலம் பல வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்கின்றனர் அல்லது தக்கவைத்து அவர்களின் திருப்தியையும், சந்தோஷத்தையும் பெறுகின்றனர் என்றால் அதுமிகையல்ல.

இதையும் படிங்க: திருச்சி: 6 மாதங்களில் 1700 மனுக்கள் மீது நடவடிக்கை :காவல் ஆணையர் சத்திய பிரியா தகவல்!

Last Updated : Jul 14, 2023, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.