ETV Bharat / state

பாமக நிறுவனர் ராமதாஸ் 85வது பிறந்த நாள் விழா! 85 ஜோடிகளுக்கு திருமணம்! - ஈடிவி தஞ்சை மாவட்ட செய்திகள்

PMK ramadoss birthday: பாமக நிறுவனர் ராமதாசின் 85வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 10ஆம் தேதி 85 ஜோடிகளுக்கு அக்கட்சியினர் திருமணம் நடத்தி வைக்க திட்டமிட்டு உள்ளனர்.

free-marriage-for-85-couples-on-behalf-of-pmk
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 85 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 9:34 AM IST

தஞ்சாவூர்: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் 85வது பிறந்தநாளை முன்னிட்டு பாமகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வைகையில் வருகிற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் 85 ஜோடிகளுக்கு 85 சீர்வரிசை பொருட்களுடன் தமிழ் முறைப்படி, இலவச திருமணம் செய்து வைக்கபட உள்ளது.

இதையும் படிங்க: Special Session of Parliament: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் சிறப்பு என்ன? எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் சவால்!

இந்நிலையில் திருமணத்திற்கு இன்னும் ஒருவார காலமே உள்ளதால், முதற்கட்டமாக இன்று மணமக்களுக்கான, திருமண பட்டு வேட்டி சேலைகளை அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில், மணமக்களிடம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின் மணமக்களுக்கு இலவசமாக பட்டு வேட்டி, பட்டு சேலையை வழங்கினார்.

இந்நிகழ்வில் பாமக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர். கடந்த ஜுலை 25ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸின் 85 வது பிறந்த நாள் வெகுவிமர்சையாக கொண்டாடபட்டது. அதன்படி மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைகளில் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி, இரத்த தானம், மரக் கன்று நடுதல், பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் உள்ளிட்ட உதவிகளை பாமகவினர் வழங்கினர்.

இதையும் படிங்க: Palladam family murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை... முன்விரோதம் காரணமா? பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.