தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த வீரசிங்கம்பேட்டை மேலத்தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் கிருஷ்ணமூர்த்தி (55). இவர் கடந்த 27ஆம் தேதி தஞ்சையிலிருந்து மோட்டார் பைக்கிள் வீரசிங்கம்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவர் கண்டியூர் மெயின்ரோட்டில் குறிஞ்சி கல்யாணமண்டபம் அருகே வந்தபோது, அவரது பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கண் இமைக்கும் நேரத்தில் கிருஷ்ணமூர்த்தி சட்டை பையிலிருந்த செல்போனை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்திருந்தார். அப்புகாரின் அடிப்படையில் நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோஸ்பின்சிசாரா, ஜம்புலிங்கம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில் அம்மன்பேட்டை ஆர்ச் அருகே 4 பேர் நிற்பதாக வந்த தகவலின்பேரில் நடுக்காவேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் கண்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகன் சந்தோஷ் (20), திருவையாறு பங்களா தெருவை சேர்ந்த சேகர் மகன் மணிமாறன் (19), கண்டியூர் ஐய்யனார்கோவில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் சூர்யா (20), மேலத்திருந்பூந்துருத்தி காளியம்மன்கோவில் தெருவை சோந்த மகேந்திரன் மகன் பாலமுருகன் (21) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் செல்போன் வழிப்பறியில் ஈடுபடுவதும் தெரியவந்தது.
உடனே அவர்களிடமிருந்து 13 செல்போன் 2 மோட்டார் பைக் பறிமுதல் செய்ததோடு, அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து, திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.