ETV Bharat / state

அண்டை வீட்டு குளியலறையில் வெப்கேம்: ஓய்வுபெற்ற எஸ்ஐ மகன் கைது

தஞ்சாவூர் அருகே அண்டை வீட்டின் குளியல் அறையில் வெப்கேம் வைத்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Tanjavur
இளைஞர் கைது
author img

By

Published : Aug 23, 2021, 1:02 PM IST

தஞ்சாவூர் தெற்குவீதி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷன். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் உதவியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்குத் திருமணம் ஆகி மனைவி, மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவரது வீட்டின் குளியலறையின் மேலே ஏதோ மின்னுவதுபோல் இருப்பதைப் பார்த்த வெங்கடேஷின் மனைவி, தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக குளியலறைக்குச் சென்று பார்த்தபோது வெப் கேமரா சார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர்பேங்க் உடன் இணைத்து வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் வெங்கடேஷின் வீட்டின் அருகில் வசிக்கும் நசீர்அகமது (35) என்பரைக் கைதுசெய்துள்ளனர்.

இது குறித்து வெங்கடேஷன் கூறுகையில், "எனது வீட்டின் அருகில் இருப்பவர் நசீர் அகமது, திருமணம் ஆகி ஆறு வயதில் எனக்குப் பெண் குழந்தை உள்ளது. மேலும் அவரின் தந்தை ஓய்வுபெற்ற முன்னாள் காவல் ஆய்வாளர். அவரின் மனைவி அரசு ஊழியர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளும், மனைவியும் குளிப்பதை, நசீர் மாடியில் இருந்து பார்த்தார். இது குறித்து அவரது தந்தையிடம் சொன்னபோது, எங்களிடம் சண்டைக்கு வந்தார்.

குளிப்பதைப் பார்க்க குளியலறையில் வெப்கேம்

எனது வீட்டின் பின்புறம் குளியலறை உள்ளது. குளியலறையொட்டி இன்னொருவருக்குச் சொந்தமான காலி வீடு உள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர், வீட்டைப் பார்ப்பதற்கு யாராவது வந்ததால், வீட்டைச் சுற்றி காட்டுவதற்காக, வீட்டின் சாவியை நசீர் அகமதுவிடம் கொடுத்துள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி காலியாக உள்ள வீட்டின் குளியலறை கண்ணாடியை கழற்றி, ஒரு அடி இடைவெளியில் உள்ள எனது குளியலறையின் மேல வெப்கேமராவைப் பொருத்தி மனைவி, மகள் குளிப்பதை ரசித்துள்ளார். தற்போது அவர் மீது புகார் அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த மேற்கு காவல் துறையினர், அவரைக் கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க: லாரி உதிரிபாக கடைக்குள் புகுந்த திருடர்கள் - கையும் களவுமாகப் பிடித்த போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.