தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தனியார் பள்ளியில் இன்று உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் பெற்றோர் தங்கள் பங்காக குழந்தைகளுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவு பண்டங்களை செய்து உணவுத் திருவிழாவில் காட்சிப்படுத்தி அசத்தினர்.
பாரம்பரிய உணவுகளான கம்பு, அடை, தோசை, பணியாரம், வரகு, அரிசி, புட்டு, முறுக்கு, சீடை, அதிரசம், ஆரோக்கிய கசாயம் என எண்ணற்ற உணவுப் பண்டங்களை பார்வைக்கு வைத்திருந்தது பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது.
மேலும் பள்ளிக் குழந்தைகளும் தங்கள் வயதிற்கேற்ப சிறு, சிறு பொருள்களை செய்து அவற்றை விற்பனை செய்தனர். பல்வேறு விதமான போட்டிகளும் குழந்தைகளே முன்நின்று நடத்தினர்.
மேலும் குழந்தைகள் சார்பாக சிறு, சிறு பண்டங்கள் செய்து காட்சிப்படுத்தப்பட்டன. இந்த உணவுத் திருவிழாவால் பள்ளி வளாகமே சிறிய கிராமியத் திருவிழா போல் காட்சியளித்தது..
இதையும் படிக்கலாமே: இயல் இசை நடனத்துடன் பாரதி யார்? நாடகம் - ஆவலுடன் ரசித்த மக்கள்