ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் தப்பிப்பது எப்படி? - கும்பகோணத்தில் மீட்புப்படை வீரர்கள் ஒத்திகை!

வடமாநிலங்களில் பருவமழை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தமிழகத்தில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் தப்பிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது.

வெள்ளத்தில் இருந்து தற்காத்து கொள்ள கும்பகோணத்தில் மீட்பு படை வீரர்கள் செயல்விளக்க ஒத்திகை

author img

By

Published : Jul 13, 2023, 5:21 PM IST

Updated : Jul 13, 2023, 5:28 PM IST

வெள்ளத்தில் இருந்து தற்காத்து கொள்ள கும்பகோணத்தில் மீட்பு படை வீரர்கள் செயல்விளக்க ஒத்திகை

தஞ்சாவூர்: வட மாநிலங்களில் தற்போது பருவ மழை தொடர்ந்து பலமாக பெய்து வருவதால், பெரும் பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.

எனவே அதனை அனைவரும் எளிதாக எதிர்கொண்டு, உயிர் சேதங்களை தவிர்க்க, பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத் துறை அதிகாரிகளின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜூலை 13) தஞ்சை மாவட்டத்தில் முதன் முறையாக கும்பகோணம் மோதிலால் தெரு, சேய் குளத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கடுமையான மழை மற்றும் வெள்ளக் காலங்களில் தங்களை தாங்களே காத்துக்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு எளிதாக புரியும்படி நேரடி செயல்விளக்கம் மற்றும் ஒத்திகைகளுடன் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் எஸ். குமார் தலைமையில், மாவட்ட உதவி தீயணைப்புத்துறை அலுவலர் கணேசன் மற்றும் கும்பகோணம் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில், மாவட்டம் முழுவதும் 22 கமாண்டோ படை வீரர்கள் உதவியோடு, பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் குறிப்பாக, காலி பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்கள், தெர்மாகோல், தேங்காய்கள், காலி பிளாஸ்டிக் குடங்கள் ஆகியவற்றைக் கொண்டு நீச்சல் தெரியாவிட்டாலும், எவ்வாறு தண்ணீரில் இருந்து தப்பித்து உயிர் பிழைப்பது என செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில், சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி, அல் அமீன் பள்ளி ஆகியவற்றை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் எஸ். குமார், மாவட்டம் முழுவதும் 9 தீயணைப்பு நிலையங்கள் உள்ளது. இதில் 120 தீயணைப்பு படை வீரர்கள் உள்ளனர். இது தவிர மாவட்டம் முழுவதும் அனைத்து நிலையங்களிலும் சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ படை வீரர்கள் 22 பேர் உள்ளனர்.

எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்டம் முழுவதும் 4 மோட்டார் பொருத்திய ரப்பர் படகுகள், மரம் அறுக்கும் சாதனங்கள், உயிர் காக்கும் கவசங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மழை, வெள்ள காலங்களில், நீர்நிலைகளில் அதிக அளவில் உயிரிழப்பது பள்ளி, கல்லூரி மாணவர்கள் தான். ஆகையால் அவர்கள் தேவையின்றி நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

நீச்சல் தெரியாதவர்கள் கண்டிப்பாக நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது. இத்தகைய ஒத்திகை மற்றும் நேரடி செயல் விளக்க நிகழ்வு மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு நிலைய எல்லை பகுதியிலும் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Delhi Flood: பொங்கி எழும் யமுனை - தண்ணீரில் தத்தளிக்கும் டெல்லி

Last Updated : Jul 13, 2023, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.