தஞ்சை மாவட்ட கடற்கரைப் பகுதியில் மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. தற்போது ரூ. 66 கோடி மதிப்பீட்டில் துறைமுக மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று புதுபிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நடைபெற்ற போதே கஜா புயலின் தாக்கத்தால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 270க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தது.
இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகம் புயல், கடல் சீற்றத்தை தடுக்கக்கூடிய வகையில் இல்லாமல் வெறும் சமவெளியாக அமைக்கப்பட்டுள்ளது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கரையோரம் நிறுத்தப்படும் படகுகள், அங்கு வசிக்கும் மக்களுக்கு பேரிடர் காலங்களில் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாகக் கூடும். எனவே துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்துத் தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.