தஞ்சாவூர்: அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பட்டுக்கோட்டை அருகிலுள்ள மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகத்தை நாட்டுப்படகு மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
அப்போது கோஷங்கள் எழுப்பியவாறே மீன்வளத்துறை அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்றனர். இதனையடுத்து மீனவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடலில் குதித்த மீனவர்
தொடர்ந்து அலுவலகத்துக்கு முன்னால் அமர்ந்த மீனவர்கள், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுக்க தவறிய அலுவலர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது ஆர்ப்பாட்டத்திலிருந்து எழுந்து சென்ற மீனவர் ஒருவர், கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள், அவரை மீட்டு கரை சேர்த்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: #வாழுவாழவிடு - கோவா முதலமைச்சருக்கு எதிராகப் பரப்புரை!