தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கவிதா திருப்பனந்தாள் காவல் நியைத்தில் ரஞ்சித் மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கும்பகோணம் நீதிமன்றத்தில் ரஞ்சித் இன்று ஆஜரானார். அப்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி நாளை முதல் மூன்று நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ரஞ்சித் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.