தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 8ஆவது நாளாக குடியிருப்புச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் களஞ்சியம், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, இந்தச் சட்டத்தை இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மதத்தினரும் எதிர்க்கின்றனர். நான் தமிழ்நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு வருகிறேன். ஒவ்வொரு கூட்டத்திலும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். எச் ராஜா கூறியதுபோல் இது கூலிக்கு மாரடிக்கும் கூட்டமல்ல, கூலிக்காக கூடிய கூட்டமென்றால் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற காவல்துறை தடியடியில் பெண்கள் கலைந்து சென்றிருப்பார்கள். ஆனால் ஒருவர் கூட வெளியேறாமல் கடைசிவரை இருந்தனர். மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிற கூட்டம் என்பதற்கு இதுவே உதாரணம் என்றார்.
இதையும் படிங்க... குடிபோதை இளைஞரிடம் டைம்பாஸ் செய்த போலீஸ்