தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி குமார் (39). இவரின் மனைவி 2015ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது 10 வயது மகளுடன் குமார் வசித்து வந்தார். 2017ஆம் ஆண்டு வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நாள்தோறும் மது அருந்தி விட்டு வந்த குமார், தனது சொந்த மகள் என்றும் பாராமல், பாலியல் வல்லுறவு செய்தார். இச்சம்பவம் குறித்து சக தோழியிடம் சிறுமி தெரிவிக்க, உடனடியாக சைல்டு லைன் அமைப்புக்கு புகார் சென்றது.
அதனடிப்படையில், சைல்டு லைன் அமைப்பினர் தொடர்புடைய கிராமத்தில் விசாரித்தனர். இதில் அச்சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் கொடுமை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து தந்தையால் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவருக்கு எய்ட்ஸ் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டு லைன் அமைப்பினர் புகார் செய்தனர்.
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் சர்ச்சை!
இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்த காவல்துறையினர், தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, போக்சோ சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் சிறை தண்டனையும் தலா 1200 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், சிறுமிக்கு அரசு 5லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.