ETV Bharat / state

மழையில் நனையும் நெல் மூட்டைகள் - விவசாயிகள் வேதனை! - விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்: திருவையாறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ப்
விவசாயிகள் வேதனை
author img

By

Published : Oct 18, 2020, 9:18 PM IST

திருவையாறு பகுதிகளில் தமிழ்நாட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, அதற்கான பணியாளர்களை நியமனம் செய்து, கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய அதிகமான தற்காலிக நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், இதுநாள் வரையில் அவற்றைத் திறக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவிற்கு சுமார் 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது என குற்றம்சாட்டுகிறார்கள். அதிக அளவில் நெல் கொள்முதல் செய்திருந்தால் மழையில் நனைந்து முளைக்கும் அளவிற்குப் போய் இருக்காது என விவசாயிகள் கூறுகிறார்கள்.

பருத்திக்குடி கிராமத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்டதில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 581 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்து அடுக்கிவைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கொண்டுவந்து பட்டறைபோட்ட சுமார் 6 ஆயிரம் மூட்டைகள் மழையினால் நனைந்து போய் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளார்கள்.

அரசு நெல் கொள்முதல் ஈரப்பதம் 17 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை ஈரப்பதம் வைத்து கொள்முதல் செய்ய வேண்டும். தினந்தோறும் அரசு கொள்முதல் நிலையங்களில் சுமார் ஆயிரம் மூட்டையாவது கொள்முதல்செய்தால்தான் இந்த மழையில் நெல் மூட்டைகளைக் காப்பாற்ற முடியும். மேலும் இதுகுறித்து முதுநிலை மண்டல மேலாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் லாரி அனுப்பிவைத்து, தங்கு தடையில்லாமல் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவேண்டும்.

அதேசமயம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வர வசதியாக இருக்கும். மேலும் புனல்வாசல், பனையூர், வரகூர், கோனேரிராஜபுரம் போன்ற ஊர்களிலும் நெல்மூட்டைகள் தேங்கி மழையில் நனைந்து கிடக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதைப்பற்றி அங்கு உள்ள நேரடி கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறியதாவது, 'நெல் மூட்டைகள் கொள்முதல் செய்தால் அடுக்கி வைக்க இடம் இல்லை. அடுக்கி இருக்கும் மூட்டைகளை எடுத்துச்சென்றால் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யமுடியும்' எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 15 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.