ETV Bharat / state

விளைவித்த பொருளுக்கு விலையில்லை..பருத்திக்கு உரிய விலை கிடைக்க வேண்டி போராடிய விவசாயிகள் - Farmers strike road demanding proper price

பருத்திக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென ஏராளமான விவசாயிகள் கும்பகோணம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்திக்கு உரிய விலை கிடைக்க வேண்டி விவசாயிகள் சாலை மறியல்

author img

By

Published : Jul 6, 2023, 5:07 PM IST

Updated : Jul 6, 2023, 5:51 PM IST

விளைவித்த பொருளுக்கு விலையில்லை..பருத்திக்கு உரிய விலை கிடைக்க வேண்டி போராடிய விவசாயிகள்

தஞ்சாவூர்: கும்பகோணம் கொட்டையூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொடர்ந்து 4வது வாரமாக நேற்று (ஜூலை 5) பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டு, தாங்கள் விளைவித்த சுமார் 3,700 குவிண்டால் பருத்தியினை சுமார் 2,440 லாட்டாக விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதனை ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்த தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து வந்த 16க்கும் மேற்பட்ட வணிகர்கள் விலையை நிர்ணயம் செய்து பட்டியல் அளித்தனர். அதில் ஒவ்வொரு லாட்டிற்கும் அதிகபட்ச விலை நிர்ணயித்த வணிகரின் விலை அந்த லாட்டிற்கான, விலையாக முடிவு செய்து பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன்படி பருத்தி விலை குறைந்தபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 5,909 ஆகவும், அதிகபட்சமாக ரூபாய் 6,642 ஆகவும், சராசரி விலையாக ரூபாய் 6,250 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து ஏலத்திற்கு வந்த பருத்திகளுக்கு ரூபாய் 2 கோடியே 31 லட்சம் விலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வாரத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூபாய் 7 ஆயிரம் கிடைத்தது. ஆனால் அடுத்த வாரங்களில் அந்த விலை கிடைக்காத போதும், நேற்றைய விலை என்பது கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூபாய் 350 அதிகமாகும். ஆனால், கடந்த ஆண்டு பருத்தி குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ரூபாய் 7,500 ஆகவும், அதிகபட்ச விலையாக ரூபாய் 12,179ஆகவும் இருந்தது. எனவே கடந்தாண்டை ஒப்பிடும்போது, நடப்பாண்டில் பருத்தி விலை பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளதால் பருத்தி விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஒழுங்குமுறை வேளாண் விற்பனைக் கூடத்தின் முன்பு, ஏராளமான பருத்தி விவசாயிகள் திரண்டு, பருத்திக்கு நியாயமான விலையினை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும்; பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும், நெல்லை போல பருத்தியையும் அரசே நேரடியாக கொள்முதல் செய்திட வேண்டும் என்றும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போராட்டத்தில் பருத்தி விவசாயிகளை ஏமாற்றும் எண்ண வேண்டாம் என்றும்; பருத்திக்கான விலையினை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றும்; மறைமுக ஏலத்தில் இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் கும்பகோணம் திருவையாறு சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், கிழக்கு காவல் ஆய்வாளர் அழகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளை களைந்து போகக் கூறினர்.

ஆனால் காவல் துறையினரின் பேச்சை விவசாயிகள் மறுக்கவே, காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. மேலும், போலீசார் அவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்த, தடைப்பட்ட போக்குவரத்து அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் துவங்கியது.

இதையும் படிங்க: பழங்குடி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: பாதிக்கப்பட்டவரின் கால்களைக் கழுவி கவுரவித்த ம.பி. முதலமைச்சர்!

Last Updated : Jul 6, 2023, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.