ETV Bharat / state

கட்டிய சில நாட்களிலேயே அகற்றப்படும் ஆற்றின் தடுப்புச் சுவர்: மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறதா அரசு? - விவசாயிகள்

கும்பகோணம் அருகே சிவபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கீர்த்திமன்னாறு ஆற்றில் தடுப்புச் சுவர் கட்டிய சில நாட்களிலேயே இடிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Kumbakonam
கும்பகோணம்
author img

By

Published : Aug 10, 2023, 10:14 AM IST

கீர்த்திமன்னாறு ஆற்றில் தடுப்புச் சுவர் கட்டிய சில நாட்களிலேயே அகற்றம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள திருவாரூர் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள சிவபுரம் கிராமத்தில் அரசலாற்றில் இருந்து கீர்த்திமன்னாறு பிரிகிறது. அதற்காக இங்கு நீரொழுங்கி ஒன்று அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பில், ரூ.136 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில், சுமார் 13 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீர்பாசன உள்கட்டமைப்புகளை நீட்டிக்கவும், புனரமைக்கவும், நவீனப்படுத்தவும் ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் லிட் (Annai Infra Developers Pvt Ltd) என்ற தனியார் ஒப்பந்ததாரர் மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பணி தொடங்கப்பட்டது.

இதில் நீரொழுங்கிக்கு அருகே இருபுறமும் நீர் தேங்குவதால், கரைகளில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு, பெரிய பெரிய சிமெண்ட் கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. அதை அமைத்து சில மாதங்களுக்கு பிறகு, இந்த தடுப்பு சுவற்றில் இருந்து பொக்லைன் இயந்திர உதவியோடு, தரையில் இருந்து சுமார் ஒன்றரை மீட்டர் உயர கற்களை மட்டும் விட்டு விட்டு எஞ்சிய ஒன்றரை மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ள கற்களை பெயர்த்து எடுத்து கரையை மண் கொண்டு சமன் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இப்பகுதி பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதற்காக 3 மீட்டர் உயர தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. தற்போது சில மாத இடைவெளிக்கு பிறகு எதனால் அதில் பாதியளவு சுவர் அதிரடியாக அகற்றப்பட்டு வருகிறது என்பது தெரியாததால் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால் இது குறித்து பேசும் இப்பகுதி விவசாயிகள், "நீரொழுங்கி மூடினால், தேக்கப்படும் நீராலும், பெருமழை, வெள்ள காலங்களிலும், உயரம் குறைக்கப்பட்ட தடுப்பு சுவரால், கரைகளில் அரிப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயமும் உள்ளதாக" அச்சப்படுகின்றனர்.

ஆனால் இது குறித்து பொதுப்பணித்துறையினரை அணுகி கேட்டபோது, தற்போதுள்ள தடுப்பு சுவருக்கு மேல் நீரொழுங்கியை பயன்படுத்தும் போது நீர் தேங்குவதால், மேலும் சுமார் ஒரு மீட்டர் உயரம் அளவிற்கு தடுப்பு சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக தான் தற்போது தடுப்பு சுவரின் குறிப்பிட்ட அளவு உயர கற்கள் அகற்றப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் நமக்கு எழுந்துள்ள சந்தேகம், அந்த நீரொழுங்கி பயன்படுத்தும் போதே எந்த அளவு உயரத்திற்கு, எந்த அளவு நீளத்திற்கு, எவ்வளவு அளவு நீர் தேங்கும் என்பது பொதுப் பணித்துறை அலுவலர்களுக்கு தெரியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுப் பணித்துறை அலுவலர்கள் சரியாக திட்டமிடாததால், இப்படி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் இரட்டை செலவு செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறம் உண்மையாகவே தடுப்பு சுவர் உயரம் அதிகரிக்கப்படுமா? அல்லது உயரத்தை குறைக்க தான் இப்படி தடுப்பு சுவர் கற்கள் அதிரடியாக இயந்திரம் கொண்டு அகற்றப்படுகிறதா என்பது மேலும் சில மாதங்களில் கண்டிப்பாக நம் அனைவருக்கும் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘அஜித் ரசிகரா இருந்தாலும் ரஜினிதான் எனக்கு’.. போஸ்டரில் முத்தமிட்ட ரசிகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.