ETV Bharat / state

'ஒரே நேரத்தில் ஜீபூம்பா காட்ட முடியாது, விவசாயிகளின் கருத்துக்கள் நிறைவேறும்' - Farmers ideas will be fulfilled

ஒரே நேரத்தில் ஜீபூம்பா காட்ட முடியாது, விவசாயிகளின் கருத்துக்கள் நிறைவேறும். எது செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பது இருக்க கூடாது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு

author img

By

Published : Dec 16, 2022, 8:48 AM IST

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு

தஞ்சாவூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மண்டலங்களின் சம்பா நெல் கொள்முதல் தொடர்பான முத்தரப்பு கூட்டத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று (டிச.15) கலந்து கொண்டு பேசினார்.

அப்போது குறைகளை சொன்னால்தான் விவசாய சங்கம் நடத்த முடியும். குறையும் சொல்ல வேண்டும், நிறையும் சொல்ல வேண்டும். குற்றம் நிறைய சொன்னால்தான் சங்கம் நடத்துவதற்கு மதிப்பார்கள் என்றும் நல்ல கருத்துக்களை தாங்கள் உள்வாங்குகிறோம் என தெரிவித்தார்.

தங்களுக்கு பட்டறிவு உண்டு என்றும் மயிலாடுதுறை பகுதியில் கரும்பு பயிரிடுவதால் சர்க்கரை ஆலை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் கூறினார். ஒரே நேரத்தில் ஜீபூம்பா காட்ட முடியாது, விவசாயிகளின் கருத்துக்கள் நிறைவேறும். எது செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பது இருக்க கூடாது, பாராட்டுகின்ற மனசும் இருக்க வேண்டும் என்றார்.

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு என்ன வேண்டுமென்று அனைத்து மாவட்டத்திலும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. அதில் கடன் மானியம் தள்ளுபடி இதுதான், புதிய மாற்றுத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற நல்ல கருத்துக்களை வழங்கினால், அதனை நிறைவேற்ற முதலமைச்சர் தயாராக இருக்கிறார் என அவர் பேசினார்.

இதையும் படிங்க: அவதார்: தி வே ஆஃப் வாட்டர் வெளியானது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.