தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நவக்கிரக தலங்களில் இராகு ஸ்தலமாக விளங்குவது நாகநாதசாமி கோயில். இங்கு தனி சன்னதி கொண்டுள்ள இராகு பகவானுக்கு, ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (அக்.30) காலை 7.30 மணிக்கு தொடங்கிய இராகு கால பாலபிஷேக நிகழ்வில், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கோயிலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தனி கோயில் கொண்டுள்ள லட்சுமி சரஸ்வதி உடனாய கிரிகுஜாம்பிகை சன்னதிக்கும் சென்று வழிபட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுடன் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஏ.வி.கே.அசோக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து காலை 9 மணி மேல் கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.