ETV Bharat / state

தஞ்சாவூரில் போதைப்பொருள், பாலியல் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி..ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

author img

By

Published : Aug 20, 2023, 4:41 PM IST

Awareness Marathon in Thanjavur: தஞ்சாவூரில் போதைப்பொருள் தடுப்பு, சிறுவர் சிறுமியர் பாலியல் தடுப்பு போன்ற பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தஞ்சாவூரில் போதைப்பொருள், பாலியல் தடுப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி

தஞ்சாவூர்: இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே போதைப் பொருள் பழக்கம் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இந்த போதைப் பழக்கத்தால் பல இடங்களில் பாலியல் குற்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. போதை பழக்கத்தால் நாடு சீரழிந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசு, காவல் துறையினருடன் இணைந்து போதைப் பழக்கத்திற்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும், போதைப் பொருட்களை கைப்பற்றி அழிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தஞ்சாவூர் தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில், கல்வியே நாட்டின் அரண், போதைப் பொருள் தடுப்பு, சிறுவர் சிறுமியர் பாலியல் தடுப்பு விழிப்புணர்வு குறித்த மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் மாரத்தான் போட்டி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 20 ) நடைபெற்றது.

இப்போட்டியினை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன், போக்குவரத்து பிரிவு காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், உள்ளிட்டோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் ஓட்டம் மற்றும் பொதுப்பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு 20 கிலோ மீட்டர் ஓட்டம் நடைபெற்றது.

20 கிலோ மீட்டர் ஓட்ட போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக ரூபாய் 50,000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் மூன்றாம் பரிசாக ரூ 25 ஆயிரமும், கோப்பையும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: மாற்றத்தை தேடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- சாதிய அடையாளங்களை அழித்துவரும் கிராம மக்கள்!

அதே போல் ஐந்து கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 10 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ 6 ஆயிரம் மற்றும் கோப்பையும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 4 ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டது.

இந்த மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பங்கேற்று ஓடி தங்களது விளையாட்டுத் திறனை வெளிக்காட்டினர். இந்த நிகழ்ச்சியில் தனுவர்ஷன் அறக்கட்டளை நிறுவனர் உலகநாதன், கௌரவ செயலாளர் டாக்டர் சாத்தப்பன், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், இண்டாக் கௌரவச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தஞ்சாவூரில் கடந்த வாரம் காவல்துறையினரால் தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 227 வழக்குகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சுமார் 4,192 கிலோ கஞ்சா போதை பொருட்கள் இயந்திரத்தில் போடப்பட்டு மாவட்ட காவல் துறையினரால் அழிக்கப்பட்டது.

போதைப் பொருட்களை ஒழிப்பதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாக்க முடியும் என கருதி மாரத்தான் போட்டி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: நீட் விலக்கு வேண்டும் என்று சொல்ல எடப்பாடிக்கு திராணி உள்ளதா... அமைச்சர் கீதா ஜீவன் சாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.