ETV Bharat / state

நவராத்திரி பண்டிகை - சூடு பிடிக்கும் கொலு பொம்மை வியாபாரம் - நவராத்திரி

வரவிருக்கும் நவராத்திரி பண்டிகைக்காகக் கொலு பொம்மைக் கடைகளில் விதவிதமான கொலு பொம்மைகளின் தயாரிப்புகள் வேகமாகி வருகிறது.

நவராத்திரி பண்டிகை ; சூடு பிடிக்கும் கொலு பொம்மை வியாபாரம்

author img

By

Published : Sep 12, 2022, 10:50 PM IST

தஞ்சாவூர்: முப்பெரும் தேவியரைப் போற்றி வணங்கும் நவராத்திரி விழாவினை முன்னிட்டு, வீடுகளில் வைக்கப்படும் கொலு பொம்மைகளுக்கான விற்பனை தற்போது மும்மரமாகத் தொடங்கியுள்ளது. தமிழர்கள் கலை பண்பாடு, கலாச்சாரத்துடன் நாகரீகம், விருந்தோம்பல், பண்புகளை உள்ளடக்கிக் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் ஒன்று 10 நாட்களுக்குச் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரிப் பெருவிழா.

முப்பெரும் தேவியரையும் தலா மூன்று நாட்கள் வீதம் 9 நாட்களுக்குக் கொண்டாடி நிறைவாக, பத்தாம் நாளை வெற்றி நாளாக கருதி, விஜயதசமி நாளான அன்று, கல்வி உள்ளிட்ட, சகல விதமான கலைகளை துவக்கவும், சிறந்த நாளாக கருதப்படுகிறது. வழக்கமாக இவ்விழா, புரட்டாசி மாத அமாவாசை தொடர்ந்து வரும் பிரதமை திதியில் இருந்து தசமி திதி வரை பத்து நாட்களுக்கு நடைபெறும்.

இவ்வாண்டு இவ்விழா வருகிற 26ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி, அக்டோபர் 05ஆம் தேதி புதன்கிழமை வரை பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்நாட்களில், கோயில்களில் சுவாமிகளுக்கு விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர் அதே வேளையில், ஏராளமானோர் தங்கள் வீடுகளில் 5 படி, 7படி, 9படி, 11படி என பல்வேறு எண்ணிக்கையிலான படிகள் அமைப்பார்கள்.

அதில், விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து நவராத்திரி நாட்களில் பக்தி பாடல்கள் பாடி, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை வீட்டிற்கு கொலு பார்க்க அழைத்து அவர்களுக்கு மங்கல பொருட்களை வழங்கி மகிழ்வர்.

இந்நிலையில், கும்பகோணம் அருகேயுள்ள பாபுராஜபுரத்தில் தினேஷ் என்பவர், இந்த நவராத்திரி கொலுவிற்கு தேவையான பலவிதமான மண் பொம்மைகள், மரபொம்மைகள்,பேப்பர் பொம்மைகள், மிக சிறியது முதல் 3 இன்ஜ் முதல் 7 அடி உயரம் கொண்ட பலவிதமான உயரங்களில் 10 ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிலான பொம்மைகளை விற்பனைக்கு வைத்துள்ளார்.

இவை தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட பல மாவட்டங்களிலுள்ள கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இங்கு, 63 நாயன்மார்கள் செட்,தசவதாரப்பெருமாள், நவக்கிரக பொம்மைகள், காஞ்சி மகாபெரியவர்,

கொல்கத்தா கிலே பொம்மைகள் சமயபுரம் மாரியம்மன், சிவபெருமான், கும்பகர்ணன், கிருஷ்ணர், ராதை, புத்தர், விவேகானந்தர், அனுமன், விதவிதமான காய்கறிகள், திருமண செட், ராமாயண செட், மகாபாரத செட்,இசை கலைஞர்கள் செட், காமாட்சியம்மன், சரஸ்வதி, லட்சுமி, கும்பகலசம், விதவிதமான விநாயகர் சிலைகள், ஐயப்பன், செட்டியார் பொம்மை,

நவராத்திரி பண்டிகை ; சூடு பிடிக்கும் கொலு பொம்மை வியாபாரம்

மரப்பாட்சி பொம்மைகள், வாழ்வியலை விளக்கும் பலவிதமான தொழில் செய்யும் தொழிலாளர்கள் குறித்த பொம்மைகள் குறிப்பாக குடை ரிப்பேர்,காலனி செய்யும், மீன் வெட்டும், கூடை முடையும் தொழிலாளி என பல நூறு பொம்மைகளை விற்பனைக்காக தனது கடையில் காட்சிப்படுத்தியுள்ளது காண்போரை நிச்சயம் வாங்க தூண்டும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க: சோழர் கால ஒற்றை வார்ப்பு முறையில் 23 அடி உயர நடராஜர் சிலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.