தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் 27 மாவட்டங்களுக்கும் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதற்கு நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாறி மாறி முன்னிலை வந்தன.
இரண்டாவது நாளான இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஒட்டுமொத்தமாக வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளிவர உள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி ஆறு ஒன்றியங்களில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களுக்குச் சான்றிதழ் தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் 12ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக, திமுக, அமமுக சார்பில் மூன்று பேர் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளர் சுகந்தியைவிட திமுக வேட்பாளர் மும்தாஜ் 400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கிடையில் அதிமுக வேட்பாளர் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாகக் கூறி மறுவாக்குப்பதிவு செய்ய மனு அளித்தார். இதற்கு மறுவாக்குப்பதிவு செய்யக் கூடாது என்று திமுக ஒன்றியச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் உருவானதையடுத்து அனைவரும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மறுவாக்குப்பதிவு கிடையாது என்று தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் மும்தாஜ்பேகத்திற்கு வெற்றிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெளியில் வந்த திமுக வேட்பாளர் மும்தாஜிடமிடமிருந்து சான்றிதழ் அடையாளம் தெரியாத நபரால் பிடுங்கி கிழித்தெறியப்பட்டது. இதனால் திமுக, அதிமுக ஒன்றியச் செயலாள்ர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தள்ளுமுள்ளுவில் முடிந்தது.
தஞ்சாவூர் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் (276)
1. தஞ்சை ஒன்றியம் (29)
திமுக - 03
அதிமுக - 02
2.ஒரத்தநாடு ஒன்றியம் (31)
திமுக - 02
அதிமுக - 05
அமமுக - 01
3.திருவோணம் ஒன்றியம் (15)
திமுக - 02
அமமுக - 01
4.பட்டுக்கோட்டை ஒன்றியம் (19)
திமுக - 05
5.மதுக்கூர் ஒன்றியம் (13)
திமுக - 02
அதிமுக - 03
பாஜக - 01
6.பேராவூரணி ஒன்றியம் (15)
திமுக - 04
அதிமுக -03
சுயேச்சை - 01
7.சேதுபாவாசத்திரம் (16)
திமுக - 05
அதிமுக -07
8.திருவையாறு ஒன்றியம் (18)
திமுக - 08
அதிமுக - 02
தேமுதிக - 01
சுயேச்சை - 01
9.பூதலூர் ஒன்றியம் (16)
திமுக - 07
அதிமுக - 03
அமமுக - 01
பாஜக - 01
10.அம்மாபேட்டை ஒன்றியம் (17)
திமுக - 05
அதிமுக - 02
காங்கிரஸ் - 01
மார்க்சிஸ்ட் - 01
11.பாபநாசம் ஒன்றியம் (21)
திமுக - 02
அதிமுக - 03
தமாக - 01
12.கும்பகோணம் (27)
திமுக - 01
அதிமுக - 03
பாமக - 01
பாஜக - 01
13.திருவிடைமருதூர் ஒன்றியம் (22)
திமுக - 02
அதிமுக - 01
மதிமுக - 01
14.திருப்பனந்தாள் ஒன்றியம் (17)
திமுக - 05
அதிமுக - 0
அமமுக - 01
1.பூதலூர் ஒன்றியக் குழு முதலாவது வார்டு (அதிமுக) நாகலட்சுமி வெற்றி
2. பூதலூர் ஒன்றியக் குழு இரண்டாவது வார்டு (அமமுக) சவிதா ரமேஷ் வெற்றி
3. மதுக்கூர் ஒன்றியத்தில் முதலாவது வார்டு (அதிமுக) செழியன் வெற்றி
4. பட்டுக்கோட்டை ஒன்றியக் கவுன்சில் முதலாவது வார்டு (திமுக) ரமாதேவி வெற்றி
5. தஞ்சாவூர் ஒன்றியக் குழு இரண்டாவது வார்டில் (திமுக) சித்ரா வெற்றி
6. மதுக்கூர் ஒன்றிய 13ஆவது வார்டு (அதிமுக) அமுதா துரை செந்தில் போட்டியின்றித் தேர்வு
7. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு (திமுக) வேட்பாளர் மாரியாயி பன்னீர்செல்வம் வெற்றி
8. அம்மாபேட்டை ஒன்றிய கவுன்சிலர் (அதிமுக) சாந்தி முதலாவது வார்டு வெற்றி
9. திருப்பனந்தாள் ஒன்றிய கவுன்சில் முதலாவது வார்டு சம்பத் (திமுக) வெற்றி
10. பூதலூர் ஒன்றிய மூன்றாவது வார்டு (அதிமுக) தேன்மொழி வெற்றி
11. மதுக்கூர் ஒன்றிய கவுன்சில் இரண்டாவது வார்டு (அதிமுக) மணிகண்டன் வெற்றி
12.திருவோணம் ஒன்றிய ஒன்றிய கவுன்சிலர் ஐந்தாவது வார்டு (திமுக) சௌந்தரராஜன் வெற்றி
13. திருவிடைமருதூர் ஒன்றிய கவுன்சிலர் மூன்றாவது வார்டு (திமுக) ராஜா வெற்றி
14.பூதலூர் ஒன்றியம் கவுன்சில் நான்காவது வார்டு (திமுக) பிரேமா வெற்றி
15. திருப்பனந்தாள் ஆறாவது வார்டு (அமமுக) எஸ். கருணாநிதி வெற்றி
16.திருவையாறு ஒன்றிய கவுன்சில் மூன்றாவது வார்டு (தேமுதிக) சுரேஷ் குமார் வெற்றி
17.திருவையாறு நான்காவது வார்டு ராமதாஸ் (திமுக) வெற்றி
18.ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சில் (அதிமுக) முதலாவது வார்டு கணேசன் வெற்றி
19.ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சில் (அதிமுக) இரண்டாவது வார்டு தேவதாஸ் வெற்றி
20. ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சில் (அதிமுக) மூன்றாவது வார்டு ரவிச்சந்திரன் வெற்றி
21. ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சில் (அதிமுக) நான்காவது வார்டு வித்தியா பிரபாகரன் வெற்றி
22. பாபநாசம் மூன்றாவது வார்டு சுமதி (தமிழ் மாநில காங்கிரஸ்) வெற்றி
23. பாபநாசம் நான்காவது வார்டு கோபிநாதன் (அதிமுக) வெற்றி
24.திருவிடைமருதூர் முதலாவது வார்டு கிருஷ்ணவேணி (அதிமுக) வெற்றி
25. திருவிடைமருதூர் இரண்டாவது வார்டு பத்மாவதி கிருஷ்ணராஜ் (திமுக) வெற்றி
26. திருவிடைமருதூர் நான்காவது வார்டு முருகன் (மதிமுக) வெற்றி
27. பூதலூர் ஒன்றிய ஐந்தாவது வார்டு ரம்யா (தமுக) வெற்றி
28. திருப்பனந்தாள் ஒன்றியம் நான்காவது வார்டு (திமுக) சீத்தாபதி வெற்றி
29. கும்பகோணம் முதலாவது வார்டு கண்ணகி வெற்றி
30. கும்பகோணம் இரண்டாவது வார்டு (பாமக) மருதையன் வெற்றி
31. கும்பகோணம் ஆறாவது வார்டு (திமுக) தியாகராஜன் வெற்றி
32. பட்டுக்கோட்டை நான்காவது வார்டு (திமுக) பழனிவேல் வெற்றி
33. சேதுபாவாசத்திரம் (அதிமுக) முதலாவது வார்டு கவிதா வெற்றி
34. சேதுபாவாசத்திரம் இரண்டாவது வார்டு (திமுக) ராசலெட்சுமி வெற்றி
35. சேதுபாவாசத்திரம் மூன்றாவது வார்டு (திமுக) அமுதா ராஜேந்திரன் வெற்றி
36. பேராவூரணி (அதிமுக) இரண்டாவது வார்டு அமிர்தவல்லி வெற்றி
37.திருவையாறு ஐந்தாவது வார்டு (திமுக) பாஸ்கர் வெற்றி
38. ஒரத்தநாடு ஏழாவது மங்களாம்பாள் (அமமுக) வெற்றி
அதிமுக -15
திமுக -16
அமமுக - 03
தேமுதிக - 01
தமிழ் மாநில காங்கிரஸ் - 01
மதிமுக - 01
பாமக - 01
சுயேச்சை - 01
மொத்தம் - 39
இதையும் படியுங்க: திமுகவினர் மீது அதிமுக வேட்பாளர் புகார் மனு