கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுவருகிறது.
அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன் தனது சொந்த செலவில் 15 டன் காய்கறிகள், முகக்கவசங்கள், கையுறைகள், கிருமி நாசினிகளை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
இதையடுத்து, திமுக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் துவரங்குறிச்சி கிராமத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம்: மாவட்ட ஆட்சியர்