ETV Bharat / state

தீபாவளி பர்ச்சேஸ் - தெருவோர கடைகளில் குவியும் வாடிக்கையாளர்கள் - தீபாவளி பர்ச்சேசிங்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை 24ஆம் கொண்டாடப்படவுள்ள நிலையில், கும்பகோணம் மாநகரிலுள்ள தெருவோர கடைகளில் வியாபாரம் களைகட்டியுள்ளது. கடைசி நேரத்தில் மலிவு விலையில் ஜவுளி உள்ளிட்ட பொருள்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால், மாநகர முக்கிய வீதிகள் எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 23, 2022, 8:18 PM IST

தஞ்சாவூர்: விடிந்தால் தீபாவளி என்ற நிலையில், கடைசி நேர விற்பனை கும்பகோணத்தில் களைகட்டியுள்ளது. கடந்த ஒருவார காலமாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து, எதிர்பார்த்த மக்கள் வருகை இல்லாமல், தீபாவளி வணிகத்தை நம்பியிருந்த தெருவோர கடை வணிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், இன்று (அக்.23) கடைசி நாள் என்பதாலும், நண்பகல் வரை மழை இன்றி தப்பியதால், மாநகரின் முக்கிய வீதிகளில் அமைக்கப்பட்ட கடைகளில் கூட்டம் அலைமோதியது.

அங்கு, மலிவு விலையில் கிடைக்கும் வேட்டி, சேலைகள், சட்டைகள், கைலிகள், உள்ளாடைகள், சிறுவர் சிறுமிகளுக்கான ஆயத்த ஆடைகள், உள்ளிட்ட ஜவுளி ரகங்கள், வீட்டு உபயோக கால் மிதியடிகள், போர்வைகள், துண்டுகள், வாட்சுகள், குளிர் கண்ணாடிகள், பெண்களுக்கான வளையல் உள்ளிட்ட அலங்காரப்பொருள்கள் விற்கப்பட்டது.

மேலும், இன்று கடைசி நேர விற்பனை என்பதால் மலிவு விலையில் வணிகம் களைகட்டியுள்ளது. இதனால், மாநகரில் ஆயிகுளம் சாலை முதல் மொட்டை கோபுரம் வரை தஞ்சை முக்கிய சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சாலையோர கடைகளுக்கு ஈடாகப் பெரிய ஜவுளிக் கடைகளிலும், கடைசி நேர விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றால் தீபாவளி சிறப்பாகக் கொண்டாட முடியாமலும், தீபாவளி வணிகம் சிறப்பாக இல்லாத நிலையில், இந்த ஆண்டு கடைசி வாரத்தில் விட்டு விட்டு மழை பெய்த போதும், நேற்றும் இன்றும் வணிகம் விறுவிறுப்படைந்துள்ளது.

முக்கிய வீதிகள் எங்கும் மக்கள் தலைகளாகக் காணப்படுகிறது, இந்த நிலை இன்று நள்ளிரவு வரை நீடித்தால், தற்காலிக கடை அமைந்துள்ள வெளியூர் வெளிமாநில வணிகர் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கானோருக்கு மலிவு விலையில் பொருட்கள் கிடைப்பதால் அவர்களும் பெரிதும் மகிழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

தெருவோர கடைகளில் குவியும் வாடிக்கையாளர்கள்

தீபாவளி நிறைவு நாள் கூட்டத்தை முறைப்படுத்தி, குற்றச்சம்பவங்கள் அரங்கேறாமல் தடுக்கும் வகையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திடவும், கும்பகோணம் உட்கோட்ட காவல் துறை, உச்சிப்பிள்ளையார்கோயில் அருகே, சாரங்கபாணி தேரடியில் காவல் உதவி மையம் ஏடிஎஸ்பி சுவாமிநாதன் மேற்பார்வையில், டிஎஸ்பி அசோகன் தலைமையில் அமைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மாநகர் முழுவதும் 250 கண்காணிப்புக் கேமராக்களை கொண்டும் காவல் உதவி மையம் மற்றும் நவீன காவல் கட்டுப்பாட்டு மையம் வாயிலாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. உச்சிப்பிள்ளையார் கோயில், ஆச்சிப்பிள்ளையார்கோயில் பகுதி உள்ளிட்ட 3 இடங்களில் உயர் கண்காணிப்புக் கோபுரங்களிலிருந்தும் தொடர்ந்து காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

பொதுமக்களுக்குக் காவல் துறையினர் அவ்வப்போது நகர் முழுவதும் 35 இடங்களில் இணைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கி வாயிலாக முன்னெச்சரிக்கை தகவல்களையும், கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாகக் காணும் காட்சிப்பதிவுகளுக்கு ஏற்ப எச்சரிக்கைகளையும், அறிவிப்புகளையும் அவ்வப்போது செய்து வருகின்றனர். அனைத்து தரப்பினரிடமும், தீபாவளி பண்டிகை எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் உற்சாகமாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை ஜோர்..! மதுரை மல்லி விலை விர்ர்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.