தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருபவர் கார்த்தி. கூலி தொழிலாளியான இவரின் மனைவி குமுதா (29). இவர்களுக்கு அகிலாண்டேஸ்வரி (4) சரவணன் (2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். குமுதா பிறவிலேயே கால் வலுவிழந்து, நடக்க முடியாமல் உள்ளார்.
இப்போது, 3 சக்கர கைவண்டியைப் பயன்படுத்தி வருகிறார். இவர், மாற்றுதிறனாளிக்கான ஸ்கூட்டர் வழங்கக் கோரி, மாற்றுதிறனாளி நலத்துறை அலுவலர்ளிடம், மூன்று முறை மனு அளித்துள்ளார். ஆனால், ஒராண்டாகியும் மனுவிற்கான எந்த நடவடிக்கையும் அலுவலர்கள் எடுக்கவில்லை என்று கூறபடுகிறது.
மதுரையில் புதிதாக மூன்று சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டது ஏன்? - நீதிபதிகள் கேள்வி
எனினும், சோர்வடையாமல் தொடர்ந்து 7ஆவது முறையாக, ஸ்கூட்டர் கேட்டு, குடும்பத்துடன் வந்து மனு அளித்தார். இது குமுதா கூறும்போது, “மாற்றுதிறனாளிக்கான ஸ்கூட்டர் கேட்டு, ஓராண்டில் ஏழு முறை மனு அளித்து விட்டேன். தற்போது நான் மாற்றதிறனாளிக்கான சைக்கிளில் சென்று வருகிறேன். சைக்கிள் என்பதால், பேருந்தில் கூட ஏற்றி செல்ல மறுத்து விடுகிறார்கள்.
பெரம்பலூரில் எட்டாயிரம் பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!
இப்படி இருக்க, வீட்டிலிருந்து கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்க கூட யாரையவது எதிர்ப்பார்த்து காத்திருக்க வேண்டி நிலையுள்ளது. மேலும், எனது வீட்டிலிருந்து ஆட்சியர் அலுவலகம் 3 கி.மீ,.துாரம் இருக்கும் நிலையில், ஒவ்வொரு முறையும் மனுக்கொடுக்க வரும் போதும், எனது கணவர், என்னை சைக்கிளில் வைத்து, தள்ளிக்கொண்டே வருவார்.
ஆனால் இங்குள்ள அலுவலர்கள் பல காரணங்களைச் சொல்லி தட்டிக்கழித்து வருகிறார்கள். விரைந்து அம்மா ஸ்கூட்டராவது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.